மூத்த குடிமக்கள் பெரும்பாலும் மற்ற முதலீட்டு விருப்பங்களை விட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை (FDs) விரும்புகிறார்கள். இந்த நிலையில், பல்வேறு சிறு நிதி வங்கிகள் (SFBs) மூத்தக் குடிமக்களுக்கு 9%க்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
சிறிய நிதி வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) கட்டுப்படுத்தப்படுகின்றன. எனினும், சிறு நிதி வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான வைப்புத்தொகைகள் மட்டுமே காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
1) யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1001 நாள்களில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 9.50% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
எனினும் எஃப்.டி அல்லது ஆர்.டி முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு, அந்தக் காலத்திற்குப் பொருந்தக்கூடிய விகிதத்தில் 1.00% முன்கூட்டியே அபராதம் விதிக்கப்படும்
2) உத்கர்ஷ் சிறு நிதி வங்கி
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி மூத்த குடிமக்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு இடைப்பட்ட FD களுக்கு 9.10% வழங்குகிறது. முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் 1% ஆகும். எனினும், இது 7 நாள்களுக்குள் மூடுவதற்குப் பொருந்தாது.
3) ஈகுடாஸ் சிறு நிதி வங்கி
இந்த சிறிய நிதி வங்கியில் மூத்த குடிமக்களுக்கு FD களின் வட்டி விகிதங்கள் 9% வரை உயரலாம். குறைந்தபட்ச குறிப்பிட்ட காலத்தை முடிக்கும் முன் வைப்புகளை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது வட்டி எதுவும் செலுத்தப்படாது.
4) சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FDகளுக்கு 9.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது. முன்கூட்டியே திரும்ப பெற்றால் பொருந்தக்கூடிய அபராதம் 1% ஆகும்.
5) ஃபின்கேர் சிறு நிதி வங்கி
மூத்த குடிமக்களுக்கு, 750 நாள்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு வங்கி 9.21% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
6) ஜனா சிறு நிதி வங்கி
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1095 நாள்களில் முதிர்ச்சியடையும் FD களில் மூத்த குடிமக்களுக்கு 9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
7) ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று வருடங்களுக்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“