663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையில் உள்ள மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் டீசல் விலை ரூ1.90 பைசா குறைந்து ரூ.92.34 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பெட்ரோல், டீசல் விலை தீர்மானவம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 663 நாட்களாக பெட்ரோல் – டீசல் விலை குறைய வில்லை.
இந்நிலையில் பெட்ரோல் – டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று இரவு அறிவித்திருந்தது. இந்நிலையில் 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் ரூ. 1.88 மற்றும் டீசல் ரூ.1.90 குறைந்துள்ளது.
தற்போது 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.75 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“