/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-18T130700.703.jpg)
தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சி மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் சிறு தொழில் தொடங்க கடன் பெற முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதற்கான தொடர்பு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
சென்னையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (TNULM) கீழ் ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுக்காக நிதியுதவி வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெருவோர வியாபாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், சுயஉதவி குழுக்கள் (SHGs), SHG உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் தொழில் தொடங்க ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பெறலாம். சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய வங்கி இருப்பை விட நான்கு மடங்கு வரை எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் கடன்களைப் பெறலாம். சுய உதவிக்குழுக்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற தகுதியுடையவர்கள். கூடுதலாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதற்கு பெறப்படும் கடனுக்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்கும்.
கடன் பெற விரும்பும் பொதுமக்கள் இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 9444094247, 9444094248 அல்லது 9444094249 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் திட்ட மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.