சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட் தனது ஊழியர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் தனது சொந்த செலவில் ஒரு வார காலம் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல உள்ளது.
1,000 ஊழியர்களுக்கான மொத்த செலவையும் நிறுவனமே வழங்குகிறது. "profit-share bonanza" என்ற நிறுவனத்தின் திட்டத்தில் பங்காற்றி நிறுவனத்தின் விற்பனை இலக்கை அடைய ங்களித்த ஊழியாகளின் உழைப்பு பற்றி பணியை அங்கீகரித்து இந்த ஏற்பாடு செய்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது.
பயணத் திட்டம்
ஊழியர்கள் ஸ்பெயினில் உள்ள பிரபல இடங்களான Sagrada Familia மற்றும் Park Güell போன்ற இடங்களுக்கும், Montjuïc Castle போன்ற அழகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நிறுவனம் தனது
ஊழியர்களை பல்வேறு நாடுகளுக்கு அழைத்து செல்வதை பாரம்பரியமாக கொண்டுள்ளது என்று கூறப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“