Gold Price Today in Chennai in Tamil: இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. இந்த சூழலில் நேற்றும் தங்கத்தின் விலை குறைந்திருந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.8,930-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை தொடர் சரிவைக் கண்டுள்ளது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.