தொடர்ந்து 3 நாட்களாக மாறாத தங்கம் விலை: வெள்ளி கிலோ ரூ.91 ஆயிரத்துக்கு விற்பனை
Chennai Gold Rate today September 10 Tuesday- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Chennai Gold Rate today September 10 Tuesday Silver rate
1/6
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
2/6
சென்னையில் சனிக்கிழமை (செப். 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,680 ஆகவும், சவரன் ரூ.53,440-க்கும் விற்பனையானது. தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான நேற்றும் (செப்.9) தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.
3/6
இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (செப். 10) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,680 ஆக உள்ளது.
Advertisment
4/6
18 காரட் தங்கம் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.5,472 ஆகவும், ஒரு சவரன் ரூ.43,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5/6
24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,135 ஆகவும் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.57,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
6/6
அதேநேரம் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.91 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 500 உயர்ந்து ரூ.91,000-க்கும் விற்பனையாகிறது.