மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 55 ஆயிரத்தை தாண்டி விற்பனை
Chennai Gold Rate today September 20 Friday: சென்னையில் வாரத்தில் 2வது முறையாக இன்று மீண்டும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.
Chennai Gold Rate today September 20 Friday Silver rate
1/5
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
2/5
சென்னையில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமை (செப்.16) தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது. அன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 55,040-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.6,680 ஆக இருந்தது.
3/5
அதன்பிறகு கடந்த 3 நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. சென்னையில் வியாழக்கிழமை (செப்.19) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.6,825 ஆக இருந்தது.
Advertisment
4/5
இந்நிலையில், வாரத்தில் 2வது முறையாக இன்று மீண்டும் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று (செப்.20) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது
5/5
நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.96-ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 96,000-க்கும் விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.1,500 உயர்ந்து பார் வெள்ளி ரூ.97,500-க்கு விற்பனையாகிறது.