சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.54,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த மே மாதம் 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.
அதன்பிறகு தங்கம் விலை ஏற்றமும், இறக்கமுமாக இருந்தது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000-க்கு மேல் விற்பனையாகி வருகின்றது.
நேற்று (ஜூலை 10), ஒரு சவரன் தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ, 54,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று (ஜூலை 11) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து, ரூ.6,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“