Advertisment

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது: புதிய விலை என்ன?

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.39.50 காசுகள் குறைந்து, ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
lpg cylinder price hike, lpg, cylinder price hike, lpg cylinder price, lpg cylinder price, lpg gas cylinder, lpg gas cylinder price, எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, lpg gas cylinder price, chennai lpg cylinder price hiked, lpg cylinder price hiked rs 37, மானியம் இல்லா சிலிண்டர் விலை உயர்வு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், lpg gas cylinder price in india, lpg gas cylinder price today, lpg cylinder rate, lpg cylinder rate in india, lpg non subsidy price today, lpg non subsidy price, lpg non subsidy rate

Chennai lpg gas cylinder price in Tamilnadu 22nd December 2023

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.39.50 காசுகள் குறைந்து, ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 ஆம் தேதி பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்தது.

இதன்மூலம் சென்னையில் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை, ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச.22) 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.39.50 காசுகள் குறைந்து, ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment