இந்திய இ-வாகன (EV) துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அதை வணிகமயமாக்குவதற்கான சூழலை உருவாக்கவும், மே 26-28 தேதிகளில் சென்னையில் சர்வதேச மின்சார கார்களின் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுக்கு சர்வதேச இந்திய மின்சார வாகன கண்காட்சி (The India International EV Show 2023 -IIEV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உலகின் முதல் 10 ஆட்டோமொபைல் மையங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் சிறந்த ஆட்டோமொபைல் கிளஸ்டர்களின் தாயகமாகவும் தமிழ்நாடு திகழ்வதால், இரண்டாம் பதிப்பிற்கான இடமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்காட்சியில் 2, 3 & 4 EVகள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள், பைக்குகள், ஸ்கேட்போர்டுகள், இ-சைக்கிள்கள், இ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஸ்டாண்ட்-ஆன் ஸ்கூட்டர்கள் ஆகியவை கிடைக்கும்.
இது தொடர்பாக ஃபியூச்சரெக்ஸ் குழுமத்தின் இயக்குனர் நமித் குப்தா கூறுகையில், “இந்த நிகழ்வு இந்திய EV தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க படியாக இருக்கும். எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான நாட்டின் பார்வையை ஆதரிக்கும்.” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“