chennai vegtables rate koyambedu market : சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்படும் பிரதான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனை செய்ய வருகின்றன.
இந்தநிலையில், நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை எதிரொலியால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து குறைந்து உள்ளது. அதே நேரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை திடீரென கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் விலை உயர்ந்து இன்று ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று பெரும்பாலான காய்கறிகள் இன்று அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
கத்தரிக்காய் - ரூ.80 (ரூ.30), வெண்டைக்காய் - ரூ.40 (ரூ.20), வெள்ளரிக்காய் - ரூ.20 (ரூ.10), கேரட் - ரூ.90 (ரூ.50), பீட்ரூட் - ரூ.60 (ரூ.35), பீன்ஸ் - ரூ.60 (ரூ.20), பாவைக்காய் - ரூ.40 (ரூ.20), சவு சவு - ரூ.30 (ரூ.10), கோவக்காய் - ரூ.40 (ரூ.10), முருங்கைக்காய் - ரூ.100 (ரூ.50), குடைமிளகாய் - ரூ.80 (ரூ.40), புடலங்காய் - ரூ.40 (ரூ.30), தக்காளி - ரூ.30 (ரூ.20), பீர்க்கங்காய் - ரூ.40 (ரூ.20), முட்டைக்கோஸ் - ரூ.40 (ரூ.20).
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”