cheque deposit atm : நம் அன்றாட வாழ்வில் வங்கிகளின் பங்கு மிகவும் அவசியம். சம்பளம் வாங்குபவர்கள், அன்றாட கூலிகள், கடை நடத்தும் வியாபாரிகள் என அனைவரின் வாழ்வும் பணம் இல்லாமல் நகர்வதில்லை.
படிக்க தெரிதோ தெரியவில்லையோ ஆனால் ஏதாவது ஒரு காரணத்திற்காக நாம் அனைவரும் வங்கி செல்லாமல் இருந்ததில்லை. இப்படி நம் வாழ்வில் பெரும் பங்காற்றும் வங்கியின் சேவைகள் குறித்து பொதுமக்கள் பலருக்கும் தெரிவதில்லை. பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பான சேவைகள் எதுவும் பாதி பேருக்கு தெரிவதில்லை.
அப்படி தெரிந்துக் கொண்டாலும் அதை பலர் மற்றவர்களுக்கு பகிர்வது இல்லை. ஆனால் இந்த செய்தியை படிப்பவர்கள் அப்படி செய்து வீடாதீர்கள். முடிந்தவரை மற்றவர்களுக்கு பகிருங்கள்.
பணம் எடுக்க, டெபாசிட் செய்ய பயன்படும், ஏ.டி.எம் இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தி ரொக்கம் பெற முடியும் என்ற தகவல் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த வசதியை இதுவரை தெரிந்துக் கொள்ளாதவர்கள் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.
நவீன வங்கி சேவை மிக மிக சுலபமாக மாறி விட்டது. கடன் வசதி தொடங்கி, கிரேடிட் கார்டு என ஏகப்பட்ட வச்திகள் வாடிக்கையாளர்கள் சேவைக்கு வந்து விட்டது. அந்த வகையில், ஏடிஎம் மூலம் செக் டெபாசிட் சேவை மற்றும் பணம் எடுக்கும் சேவை வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
இந்த புதிய வசதியை, ஏ.டி.எம் தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
எந்த வங்கி ஏடிஎம் – யாக இருந்தாலும் சரி வங்கி வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம் இயந்திரத்தில் உள்ள ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம் இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும்.
பிக்சட் டெபாசிட் செய்ய நல்ல வங்கியை தேடுகிறீர்களா? அப்ப நீங்கள் செல்ல வேண்டிய வங்கி இதுதான்!
அவர் அனுமதி அளித்ததும் ஏ.டி.எம் சாதனத்தில் காசோலையை செலுத்த வேண்டும்.
அத்துடன் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். இந்த நடைமுறை முடிந்ததும், ஏ.டி.எம் மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, பல மதிப்புகளில் ரொக்கத்தை தேர்வு செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ‘டெபிட்’ கார்டு இல்லாமல் ‘ஆதார்’ எண்ணை தெரிவித்து ரொக்கம் பெறும் வசதியும் உள்ளது.