பணம் எடுக்க, வைப்பு செய்ய பயன்படும், வைப்பு இயந்திரத்தில், இனி காசோலையை செலுத்தினால் பணம் பெற முடியும்
இன்றைய உலகின் வேகத்திற்கு ஏற்ப கடன் வசதி தொடங்கி, கிரேடிட் கார்டு என ஏகப்பட்ட வசதிகள் வங்கி வாடிக்கையாளர்கள் சேவைக்கு வந்து விட்டது. அந்த வகையில், வாடிக்கையாளர்களை பெருமளவில் கவரும் நோக்கில் ஏடிஎம் மூலம் செக் டெபாசிட் சேவை மற்றும் பணம் எடுக்கும் சேவைகளை ஏ.டி.எம் தயாரிப்பு நிறுவனமான என்.சி.ஆர் கார்ப்பரேஷன் அறிமுகப்படுத்தியுள்ளது.
Cheque Deposit : ஏடிஎம் மூலம் காசோலை வைப்பு செய்வது எப்படி தெரியுமா ?
அனைத்து வங்கி ஏடிஎம் –களிலும் வாடிக்கையாளர்கள், முதலில், ஏ.டி.எம்-மில் உள்ள ‘லைவ் டெல்லர்’ பிரிவின் இணைப்பை பெற வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தி, இந்த இணைப்பை பெறலாம். உடனே, ஏ.டி.எம் இயந்திரத்தின் முழு கட்டுப்பாடும், வாடிக்கையாளரின் வங்கி அலுவலரிடம் வந்து விடும்.
அவர் அனுமதி அளித்ததும் ஏ.டி.எம் சாதனத்தில் காசோலையை செலுத்த வேண்டும்.
மேலும் ஏதாவது ஒரு அடையாளச் சான்றை, அந்த இயந்திரத்திலேயே ‘ஸ்கேன்’ செய்து, அளிக்க வேண்டும். அடுத்து, ஏ.டி.எம் மானிட்டர் திரை மீது வாடிக்கையாளர் கையொப்பம் இட வேண்டும். இதை இயந்திரம் பரிசீலித்து ஒரு நிமிடத்திற்குள் பணம் வழங்கும்.
மேலும் படிக்க.. ஹோம் லோன் வாங்க இந்த வங்கி தான் பெஸ்ட்! எதுக்கு சொல்றோம் தெரியுமா?
வாடிக்கையாளர்கள் தமக்கு தேவைப்படும் பணத்தை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. இந்த முறையில் உள்ளூர் மற்றும் வெளியூர் காசோலைகளுக்கு உடனடியாக பணம் பெற முடியும். இந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் ‘டெபிட்’ கார்டு இல்லாமல் ‘ஆதார்’ எண்ணை தெரிவித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் பணம் வைப்பு செய்வதற்கும் தன் விபரங்களை புதுப்பிப்பதற்கும் இந்த புதிய, ஏ.டி.எம்., பயன்படும்.