ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில், எஸ்.பி.ஐ வீ கேர், எஸ்பிஐ அம்ரித் கலாஷ், எஸ்பிஐ சீனியர் சிட்டிசன் என பல்வேறு திட்டங்கள் உள்ள நிலையில் மூத்தக் குடிமக்களுக்கு சிறந்த திட்டம் குறித்து பார்க்கலாம்.
எஸ்பிஐ அம்ரித் கலாஷ் நிலையான வைப்பு
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சிறப்பு 400 நாள்கள் தவணை திட்டத்தை இந்த ஆண்டு இறுதி வரை விரிவுபடுத்தி உள்ளது.
இந்தத் திட்டத்தில் நிலையான வைப்புத் திட்டம் உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வைப்பாளர்களுக்கு 7.60% அதிக வட்டி கிடைக்கும்.
எஸ்.பி.ஐ கிளை, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் எஸ்.பி.ஐ யோனோ மொபைல் பேங்கிங் ஆப் மூலம் 31 டிசம்பர் 2023 வரை இந்தத் திட்டத்தைப் பெறலாம்.
எஸ்.பி.ஐ வீகேர் மூத்த குடிமக்கள் FD திட்டம்
டெபாசிட் செய்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வசதியையும் பெறலாம். எஸ்பிஐ அம்ரித் கலாஷ் டெர்ம் டெபாசிட் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மற்றும் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி செலுத்தப்படுகிறது.
அதேபோல், சிறப்பு நிலையான வைப்புத் திட்டம் மூத்த குடிமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களுக்கு நீண்ட கால விருப்பத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலக்கெடுவைக் கொண்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் செப்டம்பர் 30, 2023 வரை கிடைக்கும், இது 7.50% வட்டியை வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆண்டுக்கு 8.20% அதிக வட்டி வழங்குகிறது.
குறைந்தபட்ச வைப்புத்தொகை ஆயிரம் ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள ஏதேனும் ஒரு தொகையில் ரூபாய் 30 லட்சத்திற்கு மிகாமல் கணக்கு தொடங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“