புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சி திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

கண்காட்சியில் கைத்திறன் சந்தைப்படுத்துதல் மற்றும் சேவை மையங்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்ட 100 கைவினை கலைஞர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைவினை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.