தேவை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தமிழகத்தில் உற்பத்தி துறை பாதிப்பு

கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியிருந்தாலும் இந்தியாவின் உற்பத்தி துறை பொருட்களின் தேவை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியிருந்தாலும் இந்தியாவின் உற்பத்தி துறை பொருட்களின் தேவை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india lockdown, coronavirus lockdown, migrant workers, migrant workers demand, migrant workers crisis,தேவை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை, தமிழகத்தில் உற்பத்தி துறை பாதிப்பு, கோவை உருக்கு ஆலைகள் நெருக்கடி, tamil nadu migrant workers, tamil nadu foundry hub, Tamil indian express

india lockdown, coronavirus lockdown, migrant workers, migrant workers demand, migrant workers crisis,தேவை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை, தமிழகத்தில் உற்பத்தி துறை பாதிப்பு, கோவை உருக்கு ஆலைகள் நெருக்கடி, tamil nadu migrant workers, tamil nadu foundry hub, Tamil indian express

கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியிருந்தாலும் இந்தியாவின் உற்பத்தி துறை பொருட்களின் தேவை மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisment

கோயம்புத்தூரில் உள்ள சில உருக்கு ஆலை நிறுவனங்களைவிட மற்ற தொழில்களில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தின் ஜவுளி நிறுவனங்களிலும் பொறியியல் துறையிலும் சுமார் 600 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மாதத்திற்கு சுமார் 100,000 டன் வார்ப்புகளை உற்பத்தி செய்கின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.1,100 கோடி அல்லது ஆண்டுக்கு ரூ.13,000 கோடி ஆகும்.

தமிழகத்தில் பொதுமுடக்கம் மார்ச் 22ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு குறைந்தது ஆறு மாதங்களாக நாங்கள் 70-75% மட்டுமே செயல்பட்டு வந்தோம். எங்களுடைய திறன் பயன்பாடு மார்ச் மாதத்தில் 50% ஆகவும், ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியமாகவும் சரிந்தது. கடந்த மாதம், நாங்கள் 5-10% வேலை செய்தோம். அது ஜூன் மாதத்தில் 20-25% வரை தொடலாம்” என்று ஆர்எஸ்எம் ஆட்டோகாஸ்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் கே.இளங்கோ கூறினார். மேலும், இந்த நிறுவனம் 3 உருக்கு ஆலைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மாதத்திற்கு 2,000 டன் வார்ப்புகளை உற்பத்தி செய்கிறது.

உருக்கு ஆலைகள் அடிப்படையில், இரும்பு, எங்கு அல்லது அலுமினியத்தை உருக்கி அவற்றை வேண்டிய வடிவங்களில் அச்சுகளில் ஊற்றப்படுகிறது. பின்னர் அவை குளிரூட்டப்பட்டு திடமானதும் அச்சுகளில் இருந்து அகற்றப்படுகிறது.

Advertisment
Advertisements

கோயம்புத்தூரில் 450 சிறிய உருக்கு ஆலை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மாதத்திற்கு 400 டன் வரை உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக கிலோ ரூ.60/80 மதிப்புள்ள சாம்பல் நிற இரும்பு மற்றும் மெல்லிய இருப்பு வார்புகளை உற்பத்தி செய்கின்றன. மீதமுள்ள 150 உருக்கு ஆலை நடுத்தர நிறுவனங்கள் 1000 டன்னுக்கு குறைவாகவும் பெரிய நிறுவனங்கள் 1000 டன்னுக்கு மேலும், உற்பத்தி செய்கின்றன.

சில நிறுவனங்கள் எஃகு அலுமினியம் மற்றும் பிற இரும்பு அல்லாத வார்ப்புகளுக்கு கிலோ ரூ.120-150 அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பெறுகிறது. வாகனத் தொழில், டிராக்டர்கள், பம்புகள் மற்றும் வால்வுகள், ஜவுளி இயந்திரங்கள், ஏர் கம்ப்ரசர்கள் அல்லது லேத்ஸ் போன்றவற்றுக்கான சில பகுதிகளை வழங்குவதற்காக சிலர் வார்ப்புகளை மேலும் இயந்திரமயமாக்குகிறார்கள்.

“வணிக வாகனங்கள், பயணிகள் கார்கள் மற்றும் ஜவுளி இயந்திரங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சிக்கலில் உள்ளன. பொதுமுடக்கம் அதை மேலும் மோசமாக்கியுள்ளது” என்று இளங்கோ சுட்டிக்காட்டுகிறார். அவருடைய நிறுவனம் லாரிகள், டிரெய்லர்கள் மற்றும் பேருந்துகளுக்கு பிரேக் டிரம்ஸை தயாரிக்கிறது. அதே நேரத்தில் அசோக் லேலண்ட் மற்றும் மெரிட்டர் எச்.வி.எஸ் இந்தியா போன்றவை இந்த நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்குபவர்களாக உள்ளனர் என்று கூறுகிறார்.

“இந்த நெருக்கடி பெரும்பாலும் தேவை பற்றியது. மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிர் செய்வதற்கான வாய்ப்புகள் காரணமாக டிராக்டர்கள் மற்றும் பம்புகளில் மட்டும் இப்போது முன்னேற்றத்தைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தமான தேவை இல்லாததால் நம்பிக்கை இல்லை” என்று கோயம்புத்தூரின் மிகப்பெரிய உருக்கு திறனைக் கொண்ட சக்தி ஆட்டோ காம்பனென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம். மாணிக்கம் குறிப்பிடுகிறார். இவருடைய நிறுவனம் மாதத்திற்கு 8,000 டன் டக்டைல் ​​/ ஸ்பீராய்டல் இரும்பு வார்ப்புகள், மற்றும் ஸ்டீயரிங் நக்கிள்ஸ், பிரேக் டிரம்ஸ் மற்றும் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார் போன்றவற்றுக்கான வட்டுகளை உற்பத்தி செய்கிறது.

இது குறித்து மாணிக்கம் கூறுகையில், “நாங்கள் மார்ச் மாதத்தில் 6,000 டன்னை உற்பத்தி செய்தோம். ஏப்ரல் மாதத்தில் எதுவும் உற்பத்தி செய்யவில்லை. கடந்த மாதம், நாங்கள் சில எந்திரங்களை வாங்கினோம். ஆனால், வார்ப்புகள் இல்லை. இந்த மாதம், நாங்கள் 800-1,000 டன் உற்பத்தியை எட்டலாம்” என்று அவர் கூறினார்.

ஆர்டர்கள் குறைவு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றது ஆகியவை கோயம்புத்தூரின் உருக்கு ஆலை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினையாகும்.

உருக்கு ஆலைகளுக்கு அச்சு தயாரித்தல், உலைக்கு உருக்குவதற்கு தேவையான பொருட்களை அளித்தல், அவற்றை அச்சுகளில் ஊற்றுதல், வார்ப்புகளை அகற்றுதல் மற்றும் சுத்தம் செய்தல் அல்லது “ஃபெட்லிங்” (உலர்ந்த மணல் கோர்கள், ரன்னர்கள், ரைசர்கள் மற்றும் பிற தேவையற்ற உலோகங்களை வெளியே எடுப்பது) ஆகியவற்றில் வேலை செய்ய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.

தானியங்கி உயர் அழுத்த மோல்டிங் கோடுகளைக் கொண்ட உருக்கு ஆலைகள்கூட "கோர் செட்டிங்" அல்லது வார்ப்புகளின் உட்புறத்தை வடிவமைக்க அச்சுகளில் செருகுவதற்கு தொழிலாளர்களை ஈடுபடுத்துகின்றன. ஒப்பீட்டளவில் திறமையான இந்த வேலைகளைத் தவிர, மூலப்பொருளை இறக்குவதற்கும், செய்து முடிக்கப்பட்ட பொருளை ஏற்றுவதற்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

“ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளைப் போல இல்லாமல், எங்கள் உருக்கு ஆலை நிறுவனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அப்படியே விட்டுவிடாமல், அவர்களில் பெரும்பாலோருக்கு தொழிற்சாலை வளாகத்திற்குள் அல்லது அதற்கு அருகில் தங்குமிடம், உணவு, ரேஷன் வழங்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை கவனித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000-3,000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டது” என்று இந்திய உருக்காலைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிஎஸ்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான் சுவாமிநாதன் கூறினார்.

ஆனால், இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 60-70 சதவீதம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். உருக்காலைகள் முழு அளவிலான செயல்பாடுகளைத் தொடங்குவது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. அதே நேரத்தில் தொழிலாளர்கள் இல்லாமல் பாதி திறன் அளவு கூட நிறுவனங்களை இயக்க முடியாது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற தன்மை இருந்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஷ்ரமிக் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் தொடங்கியவுடன் அவர்கள் இயல்பாகவே அந்த ரயிலில் ஏறி சென்றனர் என்று மாணிக்கம் கூறினார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளியேற்றம் மே மாத நடுப்பதியில்தான் நடந்தது என்று அவர் கூறினார்.

1920களின் பிற்பகுதியில் பி.எஸ்.ஜி குழுமம் உட்பட கோயம்புத்தூரின் முதல் உருக்கு ஆலை நிறுவனங்கள் விவசாய நீர்பாசனத்துக்கான பம்புகள் மற்றும் ஜவுளி இயந்திரத் தொழில்களின் தேவைகளுக்கான பொருட்களை தயாரிப்ப்பதற்காக அமைக்கப்பட்டன. லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், எல்கி எக்விப்மென்ட்ஸ் மற்றும் பம்ப்-செட் தயாரிப்பாளர்களான சிஆர்ஐ பம்புகள் மற்றும் டெக்ஸ்மோ போன்றவை சொந்தமான உருக்கு ஆலைகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் 11 மில்லியன் டன் வருடாந்திர வார்ப்பு உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கை கோயம்புத்தூர் கொண்டுள்ளது. ராஜ்கோட் (குஜராத்), கோலாப்பூர் (மகாராஷ்டிரா), பெல்காம் (கர்நாடகா) மற்றும் படாலா / ஜலந்தர் (பஞ்சாப்) ஆகியவை மற்ற பெரிய உருக்கு ஆலை கிளஸ்டர்களாக உள்ளன.

“நாம் சீனாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய வார்ப்பு தயாரிப்பாளர். சீனாவுக்கு எதிரான தற்போதைய பின்னடைவைப் பயன்படுத்திக்கொள்ளவும், அதன் மேக் இன் இந்தியா பார்வையை நிறைவேற்றவும் இந்தத் தொழிலுக்கு அரசாங்கம் ஒரு வரைபடத்தை உருவாக்க வேண்டும்” என்று பீக்கே ஸ்டீல் காஸ்டிங்ஸின் நிர்வாக இயக்குனர் கே.இ. மொய்து கூறினார். இந்த நிறுவனத்தின் உருக்கு ஆலைகள் கோயம்புத்தூர் மற்றும் கோழிக்கோடு (கேரளா) ஆகிய இடங்களில் உள்ளன. இந்த நிறுவனம், 2019-20 ஆம் ஆண்டின் மொத்த வருவாய் ரூ.435 கோடியில் ரூ.280 கோடி மதிப்புள்ள இயந்திர எஃகு மற்றும் அலாய் வார்ப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: