scorecardresearch

இந்தப் பிரச்னையால் தங்க நகை ஏற்றுமதி பாதிக்கும்: கோவையில் உற்பத்தியாளர்கள் கவலை

தங்க நகைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹெச்.யூ.ஐ டி (HUID) ஹால்மார்க் தேவை இல்லை எனவும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் கவலை

Coimbatore
Coimbatore

கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் கோவை ஜுவல் ஒன் எக்ஸ்பீரியன்ஸ் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளம் தலைமுறையினர் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களைக் கவரும் வகையில் பிரத்தியேகமாக குறைந்த விலையில் நகைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 8) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல தங்க நகை உற்பத்தியாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஹெச்.யூ.ஐ டி (HUID)எனும் 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்கத்திலான கலைப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்க நகைகளை வாங்கும் முன் HUID குறியீடு உள்ளதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய அமைவனத் துறை அறிவித்துள்ளது”.

இது குறித்து அவர் கூறுகையில், தங்க நகைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஹெச்.யூ.ஐ.டி தேவை இல்லை. கடைகளில் விற்பனை செய்யும் பட்சத்தில் இது மிகவும் அவசியம். மேலும், தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் தங்க நகைகளாக தயாரித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலக்கு என்பது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore gold producers about huid hall mark