Advertisment

விவசாய பணிகளை எளிதாக்கும் அசத்தல் கண்டுபிடிப்பு; கோவை டிராக்டர் தயாரிப்பு நிறுவனம் அசத்தல்

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் சர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், உருவாக்கபட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore Tractor Manufacturing Company

கோயம்புத்தூர் டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு

விவசாய வேலைகளை எளிதாக்கும் விதமாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் எனப்படும் இயந்திர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.டிராக்டர்கள் தயாரிப்பு நிறுவனமான புல் நிறுவனம்.

Advertisment

விவசாய நிலங்களில் குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட தரிசு பணிகளுக்கு தற்போது வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது. மேலும் இயந்திரங்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் உள்ளிட்ட விலை உயர்வால்,இயந்திரங்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் தயங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் குறைந்த எரிபொருளில் அதிக பயன்பாடுகளை கொண்ட மெசினை கோவையை சேர்ந்த டிராக்டர்கள் தயாரிப்பு நிறுவனமான புல் நிறுவனத்தினர் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில், கோவை தொழில் நிறுவனங்களில் டிராக்டர் தயாரிக்கும் நிறுவனமான “புல் மெசின்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ”சூப்பர் ஸ்மார்ட்” மாடலை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளனர்.

புதிய வாகனம் குறித்து, புல் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் பார்த்திபன் கூறுகையில், 'பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் சர்வதேச நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கபட்டுள்ளது.

இந்த இயந்திரம் விவசாயத்திற்கு அதிகரித்து வரும் வேலை ஆட்கள் பற்றாக்குறைக்கு பயனுள்ளதாக இருக்கும். பேக்ஹோ லோடர்களின் உற்பத்தியிலும் புல் நிறுவனம் இந்திய அளவில் மூன்றாமிடம் வகித்து வரும் நிலையில் தற்போது முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது' என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment