சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண் ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று (அக்டோபர்.1) சிலிண்டரின் விலையை எண் ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து அறிவித்துள்ளன.
அந்த வகையில் இன்று முதல் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டு ரூ.1898-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் ரூ.1695 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.203 உயர்ந்து ரூ.1898-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை ரூ.200 மத்திய அரசு குறைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
சுமார் 1100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 மாநிலத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தற்போது கடைகளுக்குப் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“