Advertisment

4-வது மாதமாக வணிக சிலிண்டர் விலை குறைவு; புதிய விலை என்ன?

கடந்த 4 மாதங்களில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Commercial LPG cylinder prices slashed by Rs.83
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.31 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி மாதத் தொடக்கத்தில் விலைப் பட்டியல் வெளியிடப்படும். 

Advertisment

அந்த வகையில் இன்று (ஜூலை 1) 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து 1809.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1840.50-க்கு விற்க்கப்பட்ட   வணிக சிலிண்டர் இன்று ரூ.31 குறைந்துள்ளது. 

தொடர்ந்து 4வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது. தொடர் விலை குறைவால் ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gas Cylinder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment