ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டிற்கான சலையல் எரிவாயு சிலிண்டர் 84.50 ரூபாய் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜுன் 1) புது மாதம் துவங்கி உள்ள நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. அதில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1118.50 ஆகவே விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதமும் வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்திருந்தது. கடந்த மாதம் ரூ.171 குறைக்கப்பட்டது. இந்த மாதம் ரூ. 84 குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்து வருவது ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“