சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 57 குறைவு

அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை.

அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை.

author-image
WebDesk
New Update
Puducherry govt release GO, Puducherry news, latest Puducherry news, புதுச்சேரியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம், புதுச்சேரியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.150 மானியம், புதுச்சேரி அரசாணை வெளியீடு, Puducherry, Puducherry GO Rs 300 and Rs 150 subsidy per mont for gas cylinder

Commercial LPG prices

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 ரூபாய் 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 ஆம் தேதி பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில் நவம்பர் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 101.50 காசுகள் உயர்ந்தது.

இதனால் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ 1,999.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Advertisment
Advertisements

இந்நிலையில் இன்று, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது.

ரூ.1999.50 க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை, இன்று 57 ரூபாய் குறைந்து, 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சிலிண்டரின் விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: