Advertisment

ஐ.சி.ஐ.சி.ஐ vs எஸ்.பி.ஐ vs ஹெச்.டி.எஃப்.சி: எஃப்.டி-க்கு எந்த வங்கியில் வட்டி அதிகம்?

ஹெச்டிஎஃப்சி வங்கி, டெபாசிட் காலம் மற்றும் டெபாசிட்டரின் வயதைப் பொறுத்து, எஃப்டிக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை..

author-image
WebDesk
New Update
Fixed deposit interest rates

ஐசிஐசிஐ, எஸ்பிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பராமரிக்கிறது. இதனால், வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் சமீபத்தில் மீண்டும் மீண்டும் உயர்த்தப்படுகின்றன.

Advertisment

இதனால், பணவீக்கத்தை முறியடிக்கும் கவர்ச்சிகரமான முதலீடாக ஃபிக்ஸட் டெபாசிட் மாறியுள்ளன என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய மூன்று வங்கி நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி, டெபாசிட் காலம் மற்றும் டெபாசிட்டரின் வயதைப் பொறுத்து, எஃப்டிக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை எஃப்டி விகிதங்களை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வழங்குகிறது.

ஓராண்டு டெபாசிட்டுக்கு பொது மக்களுக்கு 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம் வழங்குகிறது.

அதிகப்பட்சமாக 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம் வழங்கும்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்தக் குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது.

1 வருடம் முதல் 389 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம் வட்டி கிடைக்கும்.

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம் வட்டி கிடைக்கும்.

எஸ்.பி.ஐ வங்கி

எஸ்.பி.ஐ வங்கி, 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி கிடைக்கும்.

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம் கிடைக்கும். 

அதேபோல், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதமும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதமும் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment