பொது வருங்கால வைப்பு நிதி, மியூச்சுல் பண்ட், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் (POSS) முதலீடு செய்வது கவர்ச்சிகரமான வருமானத்தை அளிக்கும்.
பிபிஎஃப் (PPF) மற்றும் POSS முதலீடுகள் உத்தரவாதமான வருவாயை வழங்கும் அதே வேளையில், பரஸ்பர நிதிகள் சந்தை ஏற்ற இறக்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் அதிக ஆபத்துடன் வருகின்றன.
சந்தையில் பல முதலீட்டு விருப்பங்கள் இருப்பதால், எந்த முதலீட்டு விருப்பங்கள் உங்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்பதை தீர்மானிப்பது அவசியம். இது, கடினமான பணியாக கூட இருக்கலாம்.
அந்த வகையில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் தபால் அலுவலக சேமிப்பு திட்டம் (POSS) ஆகியவை கணிசமான வருமானத்தை வழங்கும் சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் சில ஆகும்.
சரியான முதலீட்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பது உங்கள் முதலீட்டு இலக்கை பொறுத்தது. இந்த முதலீட்டு விருப்பங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
பிபிஎஃப்
பொது வருங்கால வைப்பு நிதி என்பது அரசினால் ஆதரிக்கப்படும் முதலீட்டு திட்டமாகும். இதில் நீங்கள் உத்தரவாதமான வருமானத்தைப் பெறுவீர்கள்.
இது சிறு சேமிப்பு என்ற கருத்தில் செயல்படுகிறது. மேலும், காலப்போக்கில் கார்பஸ் நிதியை உருவாக்க ஒழுக்கமான முறையில் சேமிக்க உங்களை ஊக்குவிக்கிறது.
ஒரு PPF கணக்கிற்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கிடைக்கும். மற்ற விருப்பங்களுடன் ஒப்பிடும்போது முதலீடு பாதுகாப்பானது. இருப்பினும், இந்த முதலீடுகளுக்கு 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இது குறுகிய காலத்தில் வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கலாம்.
மேலும், பிபிஎஃப் முதலீடுகள் வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்குகளுக்கு தகுதியுடையவை.
மியூச்சுவல் பண்ட்கள்
பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட்கள் உங்கள் பணத்தை ஈக்விட்டி அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் அளிக்கின்றன.
பிபிஎஃப் மற்றும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புகள் உட்பட பல முதலீட்டு விருப்பங்களுடன் ஒப்பிடும்போது அவை அதிக வருமானத்தை வழங்குகின்றன.
இருப்பினும், லாபகரமான வருமானம் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது மட்டுமின்றி அதிக ஆபத்துடன் வருகிறது.
சந்தை வீழ்ச்சி அல்லது பிற சாதகமற்ற காரணிகளின் போது ஒருவர் தனது நிதியை கூட இழக்க நேரிடலாம். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் உங்கள் பணத்தை பங்குச் சந்தையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் ஆபத்தைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.
அஞ்சல சேமிப்பு திட்டங்கள்
தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் (POSS) பல முதலீட்டு விருப்பங்களை உள்ளடக்கியது. இது முக்கியமாக சிறிய தொகையைச் சேமிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது.
POSS முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத மற்றும் உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள முதலீட்டு விருப்பங்களில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற திட்டங்கள் உள்ளன.
இந்த விருப்பங்கள் வெவ்வேறு வட்டி விகிதங்களின் அடிப்படையில் வருமானத்தை வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“