Advertisment

7 சதவீதம் வரை போனஸ்.. போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ் VS எல்.ஐ.சி; எது பெஸ்ட்?

போஸ்ட் ஆபீஸ் மற்றும் எல்.ஐ.சியின் ஆயுள் காப்பீடு திட்டம், இந்த இரண்டிலும் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் ஆகியவை குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Invest Rs 10 lakh and get it doubled

கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஆயுள் காப்பீடு ஒரு சிறந்த காப்பீட்டு திட்டமாகும். வாழ்நாள் முழுவதும் அதற்கு பிறகும் பயன்படுத்தக் கூடிய திட்டமாகும். இது ஒரு குடும்பத்திற்கு பொருளதார உதவியை வழங்கும். இந்த நிலையில் அஞ்சல் நிலைய ஆயுள் காப்பீடு மற்றும் எல்.ஐ.சியின் ஆயுள் காப்பீடு திட்டத்தின் ஒப்பீடு குறித்து இங்கு பார்ப்போம். இந்த இரண்டிலும் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் ஆகியவையும், இதில் எது சிறந்தது என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.

Advertisment

அஞ்சல் ஆயுள் காப்பீடு

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்ற நிறுவனங்களின் ஆயுள் காப்பீட்டு திட்டங்களைப் போலவே உள்ளது. மத்திய அரசின் அஞ்சல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. அஞ்சல் ஊழியர்களின் நலனுக்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம். அதன் கொள்கைகளை விரிவுபடுத்திய நேரத்தில், இது இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள், பாதுகாப்பு, வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் போன்றவற்றை உள்ளடக்கி உள்ளது.

தகுதி

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், கல்வி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள், பாதுகாப்பு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. அதேசமயம் எல்.ஐ.சி இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாலிசிகளை வழங்குகிறது.

போனஸ்

பி.எல்.ஐ (Postal Life Insurance) பயனர்களுக்கு 7% அல்லது அதற்கு மேல் போனஸாக வழங்குகிறது. அதே நேரத்தில் எல்.ஐ.சி 4-5% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

காப்பீட்டுத் தொகை

50 லட்சம் ரூபாய் என்பது அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையாகும். ஆனால் எல்.ஐ.சியில் இத்தகைய வரம்பு இல்லை.

பிரீமியம்

பி,எல்.ஐ-யின் பிரீமியம் மிகவும் குறைவாக உள்ளது. அதேசமயம் எல்.ஐ.சி பிரீமியம் பி,எல்.ஐயை விட அதிகம்.

பாலிசி வாங்குதல்

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பாலிசியை தபால் நிலையத்திலிருந்து வாங்கலாம் எல்ஐசியின் பாலிசிகளை முகவர்கள் மூலமாகவும், ஆன்லைனிலும் மற்றும் நிறுவனத்திடமிருந்தும் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

வயது வரம்பு

பி.எல்.ஐ-ல் வயது வரம்பு 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதேசமயம் எல்.ஐ.சி பாலிசிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 75 ஆண்டுகள் ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Policy Post Office Lic Scheme Post Office Scheme Lic
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment