Advertisment

கூடுதல் கல்விக் கடன் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்: நிதி நெருக்கடியில் தவிக்கும் பொதுத்துறை வங்கிகள்

கல்வி கடன் வழங்குவதில், வங்கிகள் முக்கிய சிக்கலை சந்தித்து வரும் நிலையில், கூடுதலாக கல்விக் கடன் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக கல்வி கடன் வழங்காமல் இருக்க கூடாது என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

author-image
WebDesk
Sep 01, 2022 11:48 IST
கூடுதல் கல்விக் கடன் வழங்க மத்திய அரசு அறிவுறுத்தல்: நிதி நெருக்கடியில் தவிக்கும் பொதுத்துறை வங்கிகள்

கல்வி கடன் வழங்குவதில், வங்கிகள் முக்கிய சிக்கலை சந்தித்து வரும் நிலையில், கூடுதலாக கல்விக் கடன் வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக கல்வி கடன் வழங்காமல் இருக்க கூடாது என்று வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Advertisment

இது தொடர்பாக வங்கியில் பணிபுரியும் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, கடந்த வாரம் நிதி சேவைகள் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளின் 12 பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பில், கல்வி கடன் வழங்குவதில் பல்வேறு புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் இதனால் கல்விக் கடன் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

15 முதல் 30 நாட்களுக்குள் கல்வி கடன் வழங்க வேண்டும் என்றும் ரூ7.5 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு சாட்சி உத்தரவாதம் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிவுறுத்தல் பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் சுமையாக மாறும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இதுதொடர்பாக நிதி சேவைகள் துறையிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக அனுப்பபட்ட இமெயிலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

Non-Performing Assets என்று கூறப்படும் என்பிஏ-க்களாக இந்த கல்விக்கடன் மாறுகிறது. இது பொதுத்துறை வங்கிக்கு கூடுதல் சுமைகளை வழங்குவதாக இருக்கிறது. வழங்கப்படும் 8 % கல்விக் கடன் மீண்டும் செலுத்தப்படாமல் இருக்கிறது.

இந்த வருடம்  ரூ. 20,000 கோடி கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் முதல் காலாண்டில் 19 %  இலக்கை அடைய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வழங்கும் 90% கல்விக்கடன் பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படுகிறது என்றுபது குறிப்பிடதக்கக்து.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment