இந்திய பங்குசந்தையில் தொடர்ந்து வீழ்ச்சி : இன்று 309 புள்ளிகள் சரிந்தது

கடந்த இரு வணிக தினங்களில் 1000 புள்ளிகளுக்கு மேல் சந்தை இறக்கம் கண்டிருப்பதால், வரும் நாட்களில், சந்தையின் சரிவு சற்றே மட்டுப்படலாம். ...

இந்திய பங்குசந்தை இன்று தனது வணிகத்தின் நிறைவில் கிட்டத்தட்ட 1 சதவீதத்துக்கு அருகில் வீழ்ச்சி கண்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 309 புள்ளிகள் சரிந்து 34,757 என்ற அளவிலும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண்ணான நிப்டி, 94 புள்ளிகள் இறக்கம் கண்டு, 10,666 என்ற நிலையிலும் ஓய்ந்தன. கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், கடந்த வெள்ளியன்று அமெரிக்க சந்தையிலும், அதையொட்டி, மற்ற சில ஆசிய சந்தைகளிலும் காணப்பட்ட சரிவும், இன்றைய இந்திய சந்தையின் தொடக்க சரிவுக்கு பங்களித்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்றைய வணிகத்தின்போது தங்களது விலையில் ஏற்றம் கண்ட…, மற்றும் இறக்கம் கண்ட பங்குககளின் எண்ணிக்கை – கிட்டத்தட்ட சம அளவில் இருந்ததாகச் சொல்லலாம். சிமெண்ட், கட்டுமானம், இயந்திர உற்பத்தி, இரும்பு, நிதி ஆலோசனை மற்றும் ஜவுளி துறைப் பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன. சர்க்கரை, மருந்துப் பொருள் உற்பத்தி, மென்பொருள், சேவை, மீடியா மற்றும் மின்சாரம் துறைப் பங்குகளுக்கு இன்னும் கவர்ச்சி தொடர்கின்றன. கடந்த இரு வணிக தினங்களில் 1000 புள்ளிகளுக்கு மேல் சந்தை இறக்கம் கண்டிருப்பதால், வரும் நாட்களில், சந்தையின் சரிவு சற்றே மட்டுப்பட்டு, அடிப்படை வலிமை பெறும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

×Close
×Close