Convert savings account to Jan Dhan : 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில் மக்கள் அதிக அளவில் வங்கிக் கணக்குகள் துவங்க வேண்டும் என்பதும் அடக்கௌம்.
ஜீரோ பேலன்ஸில் ஜன் தன் கணக்கு துவங்குவதற்காக பலரும் தற்போது வங்கிகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ரூ. 500 தங்கள் வங்கிக் கணக்கில் நிவாரண நிதியாக அரசு வழங்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
உங்களின் வங்கிக் கணக்கு ஜன் தன் கணக்கில் இன்னும் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் மிகவும் எளிமையான முறையில் உங்களின் சிறு சேமிப்பு வங்கி கணக்கை ஜன் தன் கணக்காக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிதானவை.
தன் ஜன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க நீங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க நீங்கள் ஒரு இந்தியராக இருப்பது அவசியம். 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கலாம்.
ஜன் தன் யோஜனவாவாக கணக்கை மாற்றுவது எப்படி?
வங்கி விதிகளின் படி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை ஜன் தன் யோஜனா கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளுக்கு சென்று தங்கள் கணக்கிற்கான ரூபே (RuPay) கார்டு வழங்குமாறு விண்ணப்பக் கடிதம் தர வேண்டும். இந்த கார்டு உங்களுக்கு தரப்பட்ட பிறகு உங்களின் வங்கிக் கணக்கு அந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருக்கும்.
பலன்கள்
இதில் நீங்கள் மினிமம் பேலன்ஸ் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
இந்த கணக்கில் வைக்கப்படும் தொகைக்கு வட்டியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்
மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளை இலவசமாக பெற்றிடலாம்
விபத்து காப்பீடாக ரூ. 2 லட்சம் வரை உங்களால் பெற முடியும்
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூட ரூ. 10 ஆயிரம் வரை நீங்கள் கடன் பெற முடியும். ஆனால் இந்த வசதி நீங்கள் வங்கி கணக்கு துவங்கி சில மாதங்கள் ஆன பிறகு மட்டுமே கிடைக்கும்.
30 ஆயிரம் வரை நீங்கள் காப்பீடு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுகளுக்கு இந்த காப்பீடு பணம் கிடைக்கும்
கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள்
கணக்கு துவங்க நீங்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆண்டு வருமானம், வங்கி கிளை பெயார், நாமினியின் கிராம முகவரி பின்கோடு ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை ஆவணங்களாக தர வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil