சமையல் கேஸ் விலை உயர்வு! மக்களின் ரியாக்ஷன்ஸ்!

பெட்ரோல் , டீசல் விலை எல்லாம் ஏறிக்கொண்டே போகிறது ! நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா ?

சமையல் கேஸ் விலை உயர்வு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் அவ்வப்போது சமையல் கேஸ்ஸின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் கேஸ் விலை டெல்லியில் ரூ.59 உயர்த்தப்பட்டு உள்ளது. மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்.1) முதல் அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தற்போது சென்னையில் ரூ.838.50-க்கு விற்கப்படும் சிலிண்டரின் விலை இந்த மாதம் முதல் மானியமில்லாத ஒரு சிலிண்டரின் விலைரூ.888.50-க்கு விற்கப்படும். அதேபோல் மானியமுள்ள சிலிண்டரின் விலை தற்போது ரூ. 470-க்கு விற்கப்படும் நிலையில் இனி இந்த சிலிண்டர்களின் விலை ரூ. 472.89 ஆக உயரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன..

மேலும் இன்று முதல் சமையல் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகை ரூ. 320.49 முதல் ரூ. 376.60-ஆக உயர்த்தப்படுவதால் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு இதுநாள் வரை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 470 மானியத்தை அரசு செலுத்தி வந்த நிலையில் இனி ரூ.510 வங்கிக் கணக்கில் மானியமாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விலை உயர்வு காரணமாக சாமானிய மக்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இல்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே தினம் உயர்ந்து வரும் வரும் பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் நொந்து போயிருக்கின்றனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ5.05-ம் டீசல் விலை ரூ.4.67-ம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close