தங்கம், வெள்ளி எல்லாம் வேஸ்ட்.. இனி இதுதான் பெஸ்ட்: கணித்துச் சொல்லும் நிபுணர்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் சூரியன் உதிப்பதுபோல் தவறாமல் உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு உலோகத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் சூரியன் உதிப்பதுபோல் தவறாமல் உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு உலோகத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Next Gold

தங்கம், வெள்ளி எல்லாம் வேஸ்ட்.. இனி இதுதான் பெஸ்ட்: கணித்துச் சொல்லும் நிபுணர்!

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சமூக ஊடகதளமான எக்ஸ்-இல் (X) செய்த பதிவு முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் சூரியன் உதிப்பது போல் தவறாமல் உயர்ந்து வரும் நிலையில், மற்றொரு உலோகத்தின் விலை மிகப்பெரிய அளவில் உயரும் என கணித்துள்ளார்.

Advertisment

தங்கம், வெள்ளியைத் தாண்டி எந்த உலோகத்தின் விலை அதிகளவில் உயர வாய்ப்புள்ளது? பிளாட்டினமாக இருந்தால் கடந்த ஒரு வருடத்தில் இதன் விலை 10 கிராமுக்கு 2000 ரூபாய் அதாவது 10 சதவீதத்திற்குக் குறைவாகவே உயர்ந்துள்ளது. இப்படியிருக்கையில் அனில் அகர்வால் எந்த உலோகத்தைத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

அனில் அகர்வால் தாமிரம் அதாவது காப்பர் உலோகத்தைத் தான் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். தங்கமாகவே இருந்தாலும் சரி சந்தையில் அதற்கு டிமாண்ட் இருந்தால் மட்டுமே அதன் விலை உயரும். இப்படியிருக்கையில் காப்பர் உலோகம் உலகில் கிளீன் எனர்ஜி மற்றும் அதிநவீன தொழில்நுட்ப துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் காரணத்தால் இதற்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது. எனவே காப்பரே அடுத்த "தங்கம்" என்று அனில் அகர்வால் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு உதாரணமாக, கனடாவைச் சேர்ந்த பாரிக் கோல்ட் நிறுவனத்தின் வியூகம் மாற்றியுள்ளது மூலம், பாரிக் கோல்ட் என்ற தனது நிறுவனத்தின் பெயரை சுருக்கி வெறுமனே "பாரிக்" என்று மாற்றி உள்ளது. மாற்றத்திற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனம் தாமிர சுரங்கப் பணிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் தான் பெயர் மாற்றம் நடந்து உள்ளது என அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்து அதிநவீன தொழில்நுட்பங்களிலும் அதிகளவில் காப்பர் பயன்படுத்தப்படுகிறது எனவும் அனில் அகர்வால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

காப்பர் உலோகத்திற்கு அதிகரித்து வரும் உலகளாவியத் தேவையை பூர்த்தி செய்ய உலகெங்கிலும் உள்ள தாமிர சுரங்கங்கள் குத்தகைக்கு எடுக்கப்படும். வெட்டி எடுக்கும் பணிகளை வேகப்படுத்த புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும், சுத்திகரிப்பு பணிகளை புதுப்பிக்கப்பட்டு வருவதையும், புதிய உருக்காலைகள் கட்டப்பட்டு வருவதையும் அனில் அகர்வால் தனது பதிவில் குறிப்பிட்டார்.

காப்பர் உலோகத்திற்கு வளர்ந்து வரும் தேவையை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், கணிசமான பலன்களைப் பெற முடியும் என்றும் இளம் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும், இதை தேசிய இலட்சியமாக மாற்றுவோம் என்றும் தனது பதிவில் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Gold

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: