எஸ்பிஐ, பின்பி, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

Bank customer care numbers: வங்கிகளில் பணம் எடுத்தல், டெபாசிட் போன்ற சேவைக்காக வாடிக்கையாளர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்காக வங்கிகள் ஏராளமான சேவைகளை வழங்கியுள்ளது.

canara Bank

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. வங்கிகளில் பணம் எடுத்தல், டெபாசிட் போன்ற சேவைக்காக வாடிக்கையாளர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி(PNB), கனரா வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடா போன்றவை வாடிக்கையாளர் சேவை எண், புதிய ஆன்லைன் வசதி, டோர் ஸ்டெப் பேங்கிங் போன்ற வசதிகளை உருவாக்கியுள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை எண்

எஸ்பிஐ அதன் வாடிக்கையாளர்களுக்காக 1800 112 211, 1800 425 3800 ஆகிய இரண்டு எண்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் பேலன்ஸ் மற்றும் கடைசி 5 Transaction களை IVR மூலமாக பெறலாம். மெசஜ் மூலமாகவும் தகவல் பெறலாம். மேலும், ஏடிஎம் கார்டு பிளாக் செய்வதற்கு அல்லது ATM PIN Generate செய்வதற்கு, பழயை ஏடிஎம் பிளாக் செய்து புதிய ஏடிஎம் வாங்குவதற்கு இந்த எண்னை அழைக்கலாம்.

வாடிக்கையாளர்கள் ரொக்கப் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களுக்கோ அல்லது வங்கிக்கோ சென்றாக வேண்டும் என்பதில்லை. இதில் உள்ள சிரமத்தைப் போக்குவதற்காக டோர் ஸ்டெப் வங்கிச் சேவையை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்துகிறது.

பின்பி வங்கி சேவை எண்

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலுக்கே வந்து வங்கி சேவைகளை வழங்குகிறது. டோர்ஸ்டெப் பேங்கிங் கோரிக்கையை இப்போதே பதிவு செய்து வீட்டிலிருந்தே வங்கி சேவைகளை பெறலாம். மேலும் கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் பணத்தை எடுக்கலாம் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.மேலும் வாடிக்கையாளர்களின் டோர்ஸ்டெப் பேங்கிங் கட்டணத்தை 50% குறைத்துள்ளது.புதிய காசோலை புத்தக கோரிக்கை, நிலையான வழிமுறைகள் கோரிக்கை, கணக்கு அறிக்கை, டி.டி.எஸ் & படிவம் 16 சான்றிதழ் வழங்கல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.

http://www.psbdsb.i என்ற இணையதளத்திற்கு சென்று அதற்கான வழிமுறைகளை கடைபிடித்து வீட்டிலிருந்தே வங்கி சேவைகளை பெறலாம். வேறு ஏதேனும் உதவிக்கு வாடிக்கையாளர் சேவை எண் 1-800-180-2222 மற்றும் 1-800-103-2222 தொடர்பு கொள்ளலாம்.

கனரா வங்கி வாடிக்கையாளர் சேவை எண்

கனரா வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை பெற 1800 425 0018, 1800 208 3333, 1800 103 0018 மற்றும் 1800 3011 3333 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆன்லைன் சேவை மற்றும் ஆப்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர் சேவை எண்

Bank of Baroda வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டோர்ஸ்டெப் வங்கி சேவையை வழங்குகிறது. மேலும் 84680-01111 என்ற (Toll-free number) எண்ணில் Missed Call மூலம் உங்கள் கணக்கு இருப்பு பற்றிய தகவல்களைப் பெறலாம்.

வாடிக்கையாளர் சேவை எண் 1800 1213721 மற்றும் 1800 1037188. ஏடிஎம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 18002584455, 18001024455 இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona restriction sbi canara bank pnb bank of baroda customer care number

Next Story
7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com