கொரோனா காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக கனரா வங்கி மூன்று முக்கிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சலுகைகளுடன் சுகாதாரக் கடன், தொழில் கடன் மற்றும் பர்சனல் லோன் ஆகியவற்றை வழங்க வங்கி முடிவு செய்துள்ளது. கனரா சுரக் ஷா பர்சனல் லோன் திட்டத்தின் கீழ் ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். கொரோனா சிகிச்சை போன்ற தேவைகளுக்கு பணம் தேவைப்படுவதால் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்ய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கனரா சுரக் ஷா திட்டம் ஆறு மாத கால அவகாசம் மற்றும் செப்டம்பர் 30, 2021 வரை செயல்படும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருத்துவ ஊழியர்கள், லேப், சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 கோடி வரை கடன் வழங்கப்படும். 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் இந்தக் கடன்களுக்கு வட்டி சலுகையும், 18 மாதங்களுக்கு மொராடோரியமும் வழங்கப்படும் என கனரா வங்கி அறிவித்துள்ளது.
கனரா சிகித்ஸாவின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 21 2022 வரை அன்று காலாவதியாகிறது. கனரா ஜீவன் ரேகா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்ய மருத்துவமனைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும். இதற்கு வட்டிச் சலுகையும் உண்டு. இந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படாது என கனரா வங்கி தெரிவித்துள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் Collateral Security கேட்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"