Advertisment

வங்கிச்சேவையில் புதிய புரட்சி : ரூ.412 கோடி அளவிலான பணத்தை பட்டுவாடா செய்த தபால் துறை

India post :1.36 லட்சம் தபால் நிலையங்கள் வாயிலாக 1.86 லட்சம் கையடக்க AePS கருவிகள் மூலம் பெரும்பாலும் கிராமப்புற அல்லது வங்கி சேவை இல்லாத பகுதிகளில் தான் இவை நடந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona virus, lockdown, Post office India,Lockdown India post office,India Post Coronavirus,India Post banking,Coronavirus lockdown Post office, post office news, post office news in tamil, post office latest news, post office latest news in tamil

Corona virus, lockdown, Post office India,Lockdown India post office,India Post Coronavirus,India Post banking,Coronavirus lockdown Post office, post office news, post office news in tamil, post office latest news, post office latest news in tamil

ஊரடங்கு ஒரு வங்கி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எந்த வங்கியில் வங்கி கணக்கு வைத்திருந்தாலும் சரி, ஒரு நகரத்தில் அல்லது வங்கி கிளை இல்லாத கிராமத்திலானாலும் சரி, நீங்கள் உள்ளூர் தபால் நிலையத்தை அழைத்து பணம் வழங்குமாறு கேட்கலாம். குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்களில் ஒரு ஆண் அல்லது பெண் தபால்காரர் உங்கள் வீட்டை வந்தடைவார்கள். இதற்கு உங்களுக்கு தபால் நிலையத்தில் ஒரு கணக்கு வேண்டும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 23 அகிய நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் ரூபாய் 412 கோடியை 21 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் வழங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக 1.36 லட்சம் தபால் நிலையங்கள் வாயிலாக 1.86 லட்சம் கையடக்க AePS கருவிகள் மூலம் பெரும்பாலும் கிராமப்புற அல்லது வங்கி சேவை இல்லாத பகுதிகளில் தான் இவை நடந்துள்ளது.

இந்திய போஸ்ட் பணம் வழங்கும் வங்கியில் (India Post Payments Bank - IPPB) உள்ள AePS வசதியின் காரணமாகத் தான் இது சாத்தியமானது. இதன் மூலம் ஒருவர் வேறு எந்த வங்கியில் வங்கி கணக்கு வைத்திருந்தாலும் அவர் தனது வீட்டு வாசலில் பணத்தை எடுக்க முடியும், என அஞ்சல் துறை செயலாளர் Pradipta Kumar Bisoi தெரிவித்தார்.

மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் PPE க்களும் கொண்டுசெல்லப்படுகின்றன

வங்கி சேவைகள் மற்றும் ஓய்வூதிய பணம் விநியோகிப்பது மட்டுமல்லாது, இந்தியா போஸ்ட் தனது பரந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உதவும் பொருட்டு உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கும் கொண்டு சென்று வழங்குகிறது. மட்டுமல்லாமல் மருத்துவமனைகளுக்கு தேவையான PPE க்களையும் கொண்டு சேர்கிறது.

தபால்காரர் வங்கியை மக்களின் வீடுகளுக்கு கொண்டு வருகிறார்.

சுமார் 2 லட்சம் ஆண் மற்றும் பெண் தபால்காரர்கள் மக்களுக்கு வீட்டு வாசலில் வங்கி சேவையை வழங்குவதற்காக ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர், என Bisoi தெரிவித்தார். தபால்காரர்கள் மூலமகவோ அல்லது IPPB ஆப் மூலமாகவோ நீங்கள் இப்போது மின்சார கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துதல், டிடிஎச்(DTH) ரீசார்ஜ் செய்தல், வேறு எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் அல்லது தபால் நிலைய கணக்குக்கு பண பரிமாற்றம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Money
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment