கொரொனா: கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய தி.நகர் ரங்கநாதன் தெரு புகைப்படங்கள்

சென்னையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள எல்லா கடைகளும் இன்று மூடப்பட்டன. இதனால், ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

Tamil News Today Live
Tamil News Today Live : கடலூரில் கடைகள் திறப்பு நேரம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் கூட்டம் அனைத்தையும் செவ்வாய்க்கிழமை மூட உத்தரவிட்டது.

தமிழக அரசின் உத்தரவையடுத்து, சென்னையில் துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்த தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள எல்லா கடைகளும் இன்று மூடப்பட்டன. இதனால், ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

தினமும் மக்கள் கூட்டம் அலைமோதும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஒரு சிலர் மட்டுமே காணப்பட்டனர்.

தி.நகரில் உள்ள மிகப் பெரிய துணிக்கடைகளில் ஒன்றான சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் மூடப்பட்டு காணப்பட்டது. வெளியே பாதுகாவலர்கள் மட்டும் உள்ளனர்.

ரங்கநாதன் தெருவில் உள்ள பிளாட்பாரக்  கடைகள் தார்பாய் கொண்டு கட்டப்பட்டு மூடப்பட்டு காணப்பட்டன.

தி.நகரில் உள்ள முக்கிய நகைக்கடைகளான ஜி.ஆர்.டி, கஜானா, லலிதா ஜுவல்லரி, சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை ஆகிய பெரிய நகைக்கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன.

புகைப்படங்கள்: ஷிவானி

 

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus chennai t nagar shops are closed photos

Next Story
பல ஆண்டுகளுக்கான மருத்துவ காப்பீட்டு பாலிசி – முழு விவரம் இங்கேmulti-year health insurance policy full details
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express