Advertisment

சிக்கனைத் தாக்கியதா கொரோனா? பீதியில் சரிந்த விற்பனை

கொரோனா வைரஸ் கோழிகளால் பரவுகிறது என்ற தவறாக வதந்தி பரவியதால் இந்தியாவில் கோழி இறைச்சி விற்பனை கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது என இந்திய கோழி விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிக்கனைத் தாக்கியதா கொரோனா? பீதியில் சரிந்த விற்பனை

]

கொரோனா வைரஸ் கோழிகளால் பரவுகிறது என்ற தவறாக வதந்தி பரவியதால் இந்தியாவில் கோழி இறைச்சி விற்பனை கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது என இந்திய கோழி விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisment

சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2500-க்கு மேல் உயிரிழப்பும் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. சீனாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளை எல்லாம் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

இந்த கொரோனா வைரஸ் அச்சத்திற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதே நேரத்தில், சமூக ஊடகங்கள் மலிந்திருக்கும் இந்த காலத்தில் கோரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்களும் வதந்திகளும் சிலர் பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் கோழிகளால் பரவுகிறது என்று தவறாக வதந்தி பரவியதால் இந்தியாவில் கோழி இறைச்சி விற்பனை கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது என்று கோழி சப்ளையரான கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனம் ஊடகங்களிடம் தெரித்துள்ளனர்.

“சமூக ஊடகங்களில், குறிப்பாக வாட்ஸ்அப்பில் நிறைய தவறான பதிவுகள், மனிதர்கள் கோழிகள் மூலம் கொரோனா வைரஸை பரப்பலாம் என்ற தவறான எண்ணத்தை உருவாக்கியுள்ளனர்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.எஸ். யாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

வெங்கி உள்ளிட்ட பிற இந்திய கோழி நிறுவனங்களும் கோழி விற்பனையில் சரிவு ஏற்பட்டதாகவும் இதற்கு சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளே காரணம் என்று கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் வதந்தி காரணமாக கோழி விலை வீழ்ச்சியடைந்ததால் கோழி பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ணையாளர்கள் ஒரு கோழிக்கு ரூ.80-85 வரை பெற்று வந்தவர்கள் இப்போது ரூ.30-35 மட்டுமே பெறுகிறார்கள்.

இதனால், சில பண்ணையாளர்கள் கோழி உற்பத்தியை ஏற்கெனவே குறைக்கத் தொடங்கியுள்ளனர். ஏனென்றால், பண்ணையாளர்களால் கோழி தீணி, சரக்குகளை வைத்திருப்பதற்கான செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் உற்பத்தியைக் குறைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் வுஹான் நரத்தில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

விஞ்ஞானிகள் புதிய கொரோனா வைரஸ் வெளவால்களில் தோன்றி பின்னர் மனிதர்களுக்கு வந்தது என்றும் ஒருவேளை ஒரு இடைநிலை விலங்கு இனங்கள் வழியாகவும் வந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

மற்ற கொரோனா வைரஸ்களைப் போல இந்த புதிய வைரஸும் உள்ளது. இது COVID-19 எனப்படும் ஒரு நோயை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்கும்போதும், ​​இருமல் அல்லது தும்மும்போதும் ஒருவருக்கு நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. கதவு கைப்பிடிகள் அல்லது தண்டவாளங்கள் போன்ற அசுத்தமான மேற்பரப்புகளிலும் இது பரவுகிறது.

கோழி இறைச்சி சாப்பிடுவதற்கும் கொரோனா வைரஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மக்கள் படிப்படியாக உணர்ந்தாலும், ஒரே இரவில் கோழி உற்பத்தியை உயர்த்த முடியாது என்பதால் விற்பனை மீண்டும் பழைய நிலையை அடைய சிறிது காலம் ஆகும் என்று கோழி விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Coronavirus China Chicken
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment