Advertisment

வீடு தேடிவரும் வங்கிச்சேவை- கொரோனா காலத்தில் அசத்தும் வங்கிகள்

Bank News: ஆக்சிஸ் வங்கியின் வீட்டு வாசலில் வங்கி சேவைக்கு வாடிக்கையாளர்கள் ஒரு தொலைபேசி வழி வங்கி அதிகாரியை அழைத்து வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவையை கோர அனுமதிக்கிறது.

author-image
WebDesk
May 02, 2020 08:05 IST
corona virus, lockdown, Covid19, banking faclility, doorstep, indian bank, hdfc bank, axis bank, icici bank, sbi , sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

corona virus, lockdown, Covid19, banking faclility, doorstep, indian bank, hdfc bank, axis bank, icici bank, sbi , sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil

Bank News In Tamil: : கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குக்கு மத்தியில், வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வாடிக்கையாளர்களிடன் பணம் இல்லையென்றாலோ, அல்லது பணம் எடுக்கவேண்டும் என்றாலோ, அல்லது பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலோ அவர்கள் வங்கி கிளையையோ அல்லது ஏடிஎம் மையத்தையோ நாடி செல்ல வேண்டியதில்லை. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு வாசலில் பணம் வழங்கும் சேவையை அதிலும் குறிப்பாக கரோனா வைரஸ் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் வழங்கி வருகிறது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, IndusInd வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பிற முன்னனி வங்கிகள் வீட்டு வாசலில் பணம் வழங்கும் சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்கும் வங்கிகள் குறித்துப் பார்ப்போம்

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி பணம் மற்றும் செக் (cheque) எடுப்பது மற்றும் விநியோகிப்பது ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. இந்த சேவைகள் முற்றிலும் ஆன்லைன்லில் உள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் வீட்டு வாசலில் வங்கி சேவை வசதியை பெற வாடிக்கையாளர்கள் தங்களது Solution Manager ஐ தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது Corporate Care க்கு தொலைபேசி அழைப்பு செய்யலாம் அல்லது ‘DOORSTEP to 676766 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். வாடிக்கையாளர் குறிப்பிடும் இடத்துக்கு வங்கியின் முகவர் வந்து அனைத்து பணிகளையும் முடித்து ஒப்புதல் சீட்டு கொடுப்பார். ஐசிஐசிஐ வங்கியின் இந்த சேவை குறிப்பிட்ட நகரங்களில் உள்ளது மேலும் இது கட்டணம் உள்ள சேவை.

பாரத ஸ்டேட் வங்கி

வீட்டு வாசலில் வங்கி சேவைக்கான பதிவை வாடிக்கையாளர் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கிளையில் செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூபாய் 20,000/- வரை மட்டுமே பணம் எடுக்கவோ அல்லது பணம் டெபாசிட் செய்யவோ முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ஒரு வருகைக்கு ரூபாய் 60 + GST என்று சேவை கட்டணமும், நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 100 +GST என்று சேவை கட்டணமும் வசூலிக்கப்படும்.

ஹெச்டிஎப்சி வங்கி

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹெச்டிஎப்சி வங்கி பல்வேறு சரிப்பார்ப்புகளையும், அடையாளங்களையும் செய்கிறது.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கியின் வீட்டு வாசலில் வங்கி சேவைக்கு வாடிக்கையாளர்கள் ஒரு தொலைபேசி வழி வங்கி அதிகாரியை அழைத்து வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவையை கோர அனுமதிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Axis Bank #Icici Bank #Hdfc #Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment