கோவிட்-19 தடுப்பூசிக்காக கோவின் (CoWIN) போர்ட்டலில் பதிவு செய்தவர்களின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் எண்கள் உட்பட முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் டெலிகிராமில் பகிரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. டெலிகிராம் கணக்கில் வழக்கமாக தனிநபர்களைத் தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் உயர்மட்ட அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “நாங்கள் நிச்சயமாக இந்த சிக்கலை அறிந்துள்ளோம், மேலும் மூல காரணம் மற்றும் தரவு CoWIN அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களில் இருந்து வருகிறதா என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்றார்.
இந்தக் கசிவு 100 கோடி பேரை பாதிக்கலாம். இதில் 12-14 வயதுக்குட்பட்ட 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும், 45 வயதுக்கு மேற்பட்ட 37 கோடிக்கும் அதிகமானவர்களும் அடங்குவர், அவர்களில் கணிசமான பகுதியினர் மூத்த குடிமக்களாக இருக்கலாம்.
டெலிகிராம் போட் அந்த நபரின் பெயர், தடுப்பூசி போடும்போது அவர்கள் பயன்படுத்திய அரசு அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி போட்ட இடம் ஆகியவற்றைக் காட்டியுள்ளது.
உண்மையில், ஒரே தொலைபேசி எண்ணின் மூலம் CoWIN இல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களையும் போட் வெளிப்படுத்த முடிந்தது.
திரிணாமுல் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகாய் கூறுகையில், ராஜ்யசபா எம்.பி.க்கள் சஞ்சய் ராவத் மற்றும் டெரெக் ஓ பிரையன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் உள்ளிட்டோரின் தனிப்பட்ட தகவல்களை பாட் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமை காலை முதல், போட் டெலிகிராமில் செயலற்ற நிலையில் உள்ளது. அதனுடன் தொடர்புடைய குழுவில் “ஆதார் மற்றும் எண் தேடல் முறை இப்போது கிடைக்கவில்லை” என்ற செய்தி வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“