1,600 கடைகள்... மதிப்பு மட்டும் ரூ. 3,500 கோடி; இப்போது சிறையில் இருக்கும் இந்த தொழிலதிபர்!

பொறியாளர், வங்கி ஊழியர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்டவர் தான் சி.ஆர்.சுப்பிரமணியன். ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் மாணவரான இவர், பொறியியல் பிரிவில் இளநிலை படிப்பை முடித்துள்ளார்.

பொறியாளர், வங்கி ஊழியர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்டவர் தான் சி.ஆர்.சுப்பிரமணியன். ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் மாணவரான இவர், பொறியியல் பிரிவில் இளநிலை படிப்பை முடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
CR Subramanian Subhiksha 1600 retail outlets Rs 3500 crore business now in jail Tamil News

நாளைடைவில் இந்தியா முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட கடைகளாக சுபிக்ஷா நிறுவனம் வளர்ந்துள்ளது. அதனால், நிறுவனத்தின் மதிப்பும் ரூ. 3,500 கோடியை எட்டியுள்ளது.

பண மோசடி தொடர்பாக பல திரைப்படங்கள் வெளியாகி வரும் சூழலில், இன்று நாம் பார்க்கவிருக்கும் இந்த தொழிலதிபரின் கதை பாலிவுட் படங்களுக்கு இணையானது எனலாம். ஒரு காலத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக வெற்றியின் உச்சத்தைத் தொட்ட இவர், நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்காக தற்போது 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 

Advertisment

பொறியாளர், வங்கி ஊழியர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்டவர் தான் சி.ஆர்.சுப்பிரமணியன். ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் மாணவரான இவர், பொறியியல் பிரிவில் இளநிலை படிப்பை முடித்துள்ளார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம்-இல் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். சில காலம் பொறியாளராகவும், சில காலம் வங்கியிலும் வேலை செய்த அனுபவம் கொண்ட இவர் 1991 ஆம் ஆண்டில், விஸ்வப்ரியா நிதி சேவை எனும் வங்கி சாரா நிதி நிறுவனத்தை (என்.பி.எஃப்.சி) தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் பணம் திரட்டியுள்ளது. 

அதில் பிரபலமானவை பிரைம் இன்வெஸ்ட், சொத்து ஆதரவு பாதுகாப்பு பத்திரம், லிக்விட் பிளஸ் மற்றும் சேஃப்டி பிளஸ் போன்றவை தான். இந்தத் திட்டங்கள் பாரம்பரிய வங்கி வைப்புத்தொகை அல்லது பிற முதலீட்டு விருப்பங்களை விட கணிசமாக அதிக வருமானத்தை உறுதியளித்துள்ளன. மேலும் பாதுகாப்பு, லாபம், வழக்கமான வருமானம் மற்றும் மூலதனப் பாதுகாப்பு போன்ற உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளன. இதனை நம்பிய பெரும்பாலும் நடுத்தர வர்க்க தனிநபர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல தரப்பை சேர்ந்த 587 முதலீட்டாளர்கள் ரூ.137 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். 

இதில் பண மழை கொட்டவே, 1997 ஆம் ஆண்டில், சுப்பிரமணியன், சாமானியர்களுக்கு மலிவு மற்றும் வசதியான விருப்பமாக கருதப்படும் 'சுபிக்ஷா' என்ற சில்லறை விற்பனை தொழிலை தொடங்கியுள்ளார். குறைந்த விலை அதிக விற்பனை என்ற உத்தியுடன், மளிகைப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், மருந்துகள் மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்கி, சுபிக்ஷா நிறுவனம் விரைவாக விரிவடைந்துள்ளது. 

Advertisment
Advertisements

நாளைடைவில் இந்தியா முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட கடைகளாக சுபிக்ஷா நிறுவனம் வளர்ந்துள்ளது. அதனால், நிறுவனத்தின் மதிப்பும் ரூ. 3,500 கோடியை எட்டியுள்ளது. அசிம் பிரேம்ஜி, ஐசிஐசிஐ வென்ச்சர்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற முன்னணி முதலீட்டாளர்கள் சுபிக்ஷா நிறுவனத்தை ஆதரித்துள்ளனர்.  இருப்பினும், சுபிக்ஷாவின் வெற்றி விஸ்வப்ரியா நிதி நிறுவனத்தின் சிக்கலான யதார்த்தத்தை மறைத்தது. விஸ்வப்ரியா மூலம் ஏராளமான முதலீட்டாளர்களிடமிருந்து சுப்பிரமணியன் பெரும் தொகையை திரட்டி இருக்கிறார். 

தீவிரமான சந்தைப்படுத்தல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி, சுபிக்ஷா நிறுவனத்தில், உத்தரவாதமான வருமானம் இல்லாத பிற முயற்சிகளிலும் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தாமல், 15-20% வரை வருமானத்தை அவர் உறுதியளித்துள்ளார். முதலீட்டாளர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்தபோது, புதிய முதலீடுகள் மூலம் பழைய முதலீட்டாளர்களுக்கு பணம் செலுத்தியுள்ளார். அதாவது, போன்சி திட்டம் போலவே செயல்படுத்தியுள்ளார். 

ஆனால், 2008 ஆம் ஆண்டில் சுபிக்ஷா கடுமையான பண நெருக்கடியை எதிர்கொண்டபோது, நிலைமை மோசமடைந்துள்ளது. ஊழியர்களின் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சப்ளையர் பாக்கிகள் குவிந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, முதலீட்டாளர் நிதியைத் திசைதிருப்ப சுப்பிரமணியன் 80-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை அமைத்து, 587 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.137 கோடிக்கு மேல் பணத்தை மோசடி செய்திருக்கிறார். அந்த பணத்தை ஒருபோதும் அவர் திருப்பித் தரவில்லை. இந்த போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களின் நிதியை அவர் தவறாகப் பயன்படுத்தி தனது சொத்துக்களை மறைத்துள்ளார். இறுதியில் 2009 இல் சுபிக்ஷா நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அதனால், சுப்பிரமணியனின் நம்பகத்தன்மை சரிந்து போனது. 

2015 ஆம் ஆண்டில், பாங்க் ஆஃப் பரோடாவிலிருந்து ரூ.77 கோடி கடனை திருப்பிச் செலுத்தாதது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை அவரைக் கைது செய்துள்ளது. நவம்பர் 20, 2023 அன்று, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சுப்பிரமணியன் மற்றும் அவரது கூட்டாளிகளை தமிழ்நாடு வைப்புத்தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (TNPID) கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.8.92 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் அவரது நிறுவனங்களுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையில், முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: