Advertisment

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா? அவசர தேவைக்கு இந்த 5 'தப்பு'கள் பாவம் இல்லைங்க!

அவசரநிலை ஏற்படும் போது கிரெடிட் கார்டுகள் மட்டுமே நிதி உதவியாக இருக்கும்.அச்சமயத்தில், இந்த 5 தப்புகளை செய்தால் தப்பு இல்லை என கூறுகின்றனர்.

author-image
WebDesk
New Update
உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா? அவசர தேவைக்கு இந்த 5 'தப்பு'கள் பாவம் இல்லைங்க!

பண நெருக்கடி காலத்திலும், அவசர பண தேவைகளுக்கும் உதவும் கிரெட்டி கார்டை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் கிரெடிட் கார்டு ஸ்கோர் குறையக்கூடும். செலவுகளை திட்டமிட்டு கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் முன்னேற்றம் அடையும்.நீண்டகால அடிப்படையில் நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு பேருதவியாக இருக்கும்

Advertisment

அதேசமயம், அவசர கால சூழ்நிலையில், திட்டமிடலுக்கு அப்பாற்பட்ட இந்த 5 தப்புகளை செய்தால் தப்பு இல்லை என கூறுகின்றனர். அதனை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்துதல்

கிரெடிட் கார்டு நிறுவனங்கள், நீங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச நிலுவைத் தொகை அல்லது அதை விட அதிகமான தொகையை நிலுவைத் தேதியின் போதோ அல்லது அதற்கு முன்போ செலுத்துவதற்கான விருப்பத்தை வழங்குகின்றன.

குறைந்தபட்ச நிலுவை தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

குறைந்தபட்சத் தொகையானது, நிலுவைத் தொகையின் மீதான வட்டியையும், முதன்மைப் பகுதிக்கான சிறிய தொகையையும் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. பெரும்பாலும், அந்த தொகை மொத்த நிலுவைத் தொகையில் 5சதவீதம் ஆகும். ஆனால் இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

எனவே, ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவந்தால், கிரெடிட் கார்டு கடனைத் தீர்க்க உங்களுக்கு மிக நீண்ட காலமாகும்.

அதேசமயம், அவசர காலத்தின் போது செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துவது, உங்களுக்கான மற்ற செலவு பட்டியலில் முன்னுரிமை அதிகம் உள்ள விஷயங்களில் கவனம் செலுத்த உதவுகிறது.

கார்டில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்துவது தற்காலிக நிவாரணம் மற்றும் அபராதக் கட்டணங்களைத் தவிர்க்க மட்டுமே உதவியாக இருக்கும்.

அவசர சூழ்நிலை இல்லாத சமயத்தில், , கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை தீவிரமாகத் திருப்பிச் செலுத்த முயற்சியுங்கள்

கடன் பயன்பாட்டு 30% விகித நிலைக்கு மேல் கூடாது

சிறந்த கிரெடிட் ஸ்கோரைப் பெற, கிரெடிட் கார்டு பயனர் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (CUR) 30% க்குள் வைத்திருக்க வேண்டும். கார்டு வரம்பை மீறுவது, உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அதேசமயம், எப்போதவாது ஒரு முறை, கார்டு வரம்பு மீறுவதால் கிரெடிட் ஸ்கோருக்கு பாதிப்பு ஏற்படாது.

அவசரநிலையில் இருக்கும் சமயத்தில், மளிகைப் பொருட்கள், வீட்டு வாடகை போன்ற அத்தியாவசியச் செலவுகளைச் செலுத்த உங்களுக்கு வேறு வழி இல்லை இல்லாதபோது, உங்கள் CUR ஸ்கோர் 30% ஐ தாண்டலாம். நிலைமை சீரானதும், கிரெடிக் கார்டு லிமிட்டை முறையாக நிர்வகித்தால், கிரெடிட் ஸ்கோர் தானாக சீராகும்.

ஒருவேளை கடன் தேவை சரியாக சில நாள்கள் ஆகும் பட்சத்தில், உங்கள் கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகரிக்க சமந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது புதிய கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கிரெடிட் கார்டுகளில் பணம் எடுப்பது

ஷாப்பிங் மால்களில் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது, ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தவிர கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தையும் எடுக்க முடியும். பண நெருக்கடி சமயத்தில், உங்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாத, திடீர் மருத்துவ செலவு சமயத்தில் உதவிகரமாக அமையும்.

அதேசமயம், உண்மையிலேயே பணம் தேவைப்படும்போது மட்டுமே இந்த விருப்பத்தைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு லிமிட்டிற்குள் தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். பின்னர், நிலைமை சரியானதும், அதிக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க கிரெடிட் கார்டு கடனை விரைவாகச் செலுத்துவதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், கிரெடிட் கார்டில் மற்ற வகையான பரிவர்த்தனைகளுக்கு வட்டி செலுத்த வழங்கப்படும் காலம், பணமாக எடுப்பதற்கு கிடையாது. இவ்விவகாத்தில் வட்டி உடனே வசூலிக்கப்படும்.

வெகுமதி புள்ளிகளை பணமாக மாற்றுவது

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் டிக்கெட், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றுக்கு ரிவார்டு புள்ளிகளை உபயோகித்தால், லாபகரமான விருப்பங்களை வழங்குகின்றன. ஆனால், அந்த ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றவது, சிறந்த யோசனை கிடையாது. முழுமையான லாபத்தை பெற முடியாது. ஆனால், சில இக்கட்டான சூழ்நிலையில், எவ்வித பயணமும் மேற்கொள்ளாதவர்கள், ரிவார்டு புள்ளிகளை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

கிரெடிட் ஸ்கோருக்காக ஓடாதிர்கள்

கிரெடிட் கார்டு பில் தாமதமாகச் செலுத்துதல், கிரெடிட் வரம்பை தீர்ந்துவிட்டது, அதிகமான கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவை கிரெடிட் கார்டு ஸ்கோரை பாதிக்கலாம். கிரெடிட் ஸ்கோர் மிகவும் முக்கியமானது, ஆனால் அது உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது கிரெடிட்டை அணுகுவதைத் தடுக்கக்கூடாது. நிதி நெருக்கடி சமயத்தில் கிரெடிட் ஸ்கோரை காட்டிலும் மருத்துவ செலவுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். பின்னர், நிதி நிலைமை சீரானதும் கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Credit Growth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment