நெருக்கடியான சூழலால், விளிம்பிற்கு தள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பொருளாதாரம்

Crisis pushes Afghanistan’s economy closer to the brink: தாலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் கடும் நெருக்கடியில் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் உள்ளது.

மோசமான வளர்ச்சி வாய்ப்புகள்

ஆப்கானிஸ்தானில், கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவிகிதம் ஆக சுருங்கிய பிறகு, நிலைமை சரியாகி வர்த்தகம் மீண்டும் தொடங்கியதால் ஜிடிபி இந்த ஆண்டு மீண்டும் குதித்து 2.7 சதவிகிதம் வளரும் என்று ஐஎம்எஃப் ஜூன் மாதத்தில் மதிப்பிடப்பட்டது. இது சமீபத்திய ஆண்டுகளில் தோராயமாக 2.5 சதவிகித சராசரி வளர்ச்சி விகிதத்துடன் ஒத்துப்போகிறது, ஆனால் 2001 அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு தசாப்தத்தில் அளவிடப்பட்ட உயர்-ஒற்றை இலக்க அளவுகளுக்குக் கீழே.

ஃபிட்ச் வெள்ளிக்கிழமை ஜிடிபியின் கூர்மையான சுருக்கத்தை கணித்துள்ளது, இது 20 சதவீதமாக இருக்கலாம்.

ஏசியன் டெவலப்மென்ட் வங்கியின் கூற்றுப்படி, மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர், அவர்களது தினசரி வருமானம் 1.90 டாலருக்கும் குறைவே. இது 2017 ல் 55 சதவீதமாக இருந்தது.

வர்த்தகம் மற்றும் வளங்கள்

ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை மக்களின் முக்கிய வருமானம் மற்றும் நாட்டின் ஏற்றுமதியின் முக்கிய ஆதாரமாக விவசாயம் உள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தான் 2020 ஆம் ஆண்டில் 783 மில்லியன் டாலர் பொருட்களை ஏற்றுமதி செய்தது, இது 2019 ஐ விட 10 சதவிகித வீழ்ச்சியாகும். உலர்ந்த பழங்கள், நட்ஸ் மற்றும் மருத்துவ மூலிகைகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முக்கியமாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிக ஏற்றுமதி நடக்கிறது.

பணவீக்கம்

ஐஎம்எஃப் 2021 இல் 5.8% பணவீக்க உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கிறது. 2013 க்குப் பிறகு இது மிகப்பெரிய உயர்வாக இருக்கும். ஆனால் தலிபான்கள் பொறுப்பேற்கும்போது ஆப்கானிஸ்தானின் பலவீனம் மற்றும் வர்த்தக இடையூறுகளால், இலக்கு 8% மேல், உயர்மட்ட வரம்பை விட உயரலாம் என ஆப்கான் மத்திய வங்கி கணிக்கிறது.

With Inputs from Reuters

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Crisis pushes afghanistans economy closer to the brink

Next Story
Post Office: உங்க பணம் அதிவேகமாக டபுள் ஆகணுமா? பெஸ்ட் திட்டம் எதுன்னு பாருங்க!Post Office Schemes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express