Advertisment

அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடியால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

சர்வதேச சந்தையின் பணம் எந்த சொத்துப் பிரிவை விரட்டுகிறேதா, அவற்றில் விலையேற்றமும், எதை தவிர்கிறதோ, அதில் விலை சரிவும் ஏற்படுவது சந்தையின் இயல்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crude oil pipe and equipment

ஆர்.சந்திரன்

Advertisment

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அடுத்தடுத்த பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகளால், உலகின் பல்வேறு மூலைகளிலும் அதிர்வுகள் தொடர்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடந்த பிப்ரவரி முதல் இல்லாத அளவாக ஒரு பீப்பாய் விலை 65 அமெரிக்க டாலர் என குறைந்துள்ளது. ஊக வணிக சந்தையான ஃபியூச்சர் சந்தையில் இது 1.3% வரை இறக்கம் கண்டுள்ளது. இதற்கு டிரம்ப் சீனா மீது விதித்துள்ள புதிய வரிகள்தான் காரணம் என கூறப்படுகிறது.

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் மீது 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதனால், உலக சந்தையில் வர்த்தக போர் எற்படுமோ என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

ஒருவேளை அத்தகைய சூழல் ஏற்பட்டால், பல நாடுகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும். இது சம்மந்தப்பட்ட நிறுவனங்களையும், அவற்றின் வருங்கால லாபத்தையும் பாதிக்கும் என்பதால், அமெரிக்கப் பங்குசந்தைகளில் பல நிறுவனங்களின் பங்குவிலை கடும் சரிவைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன் எதிரொலியாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என கூறப்படுகிறது.

பொதுவாகவே சர்வதேச சந்தையில் 3 அல்லது 4 விஷயங்களுக்குள் தான் பல நாடுகளின் நிதியும் முடங்கியுள்ளன. அதனால், எங்கே அவற்றின் நகர்வு பிரச்னை இல்லாம்ல் இருக்கிறதோ, அங்கு சுமூக நிலையும், எங்கு தடுக்கப்படுகிறதோ அங்கே எதிர்வினையும் ஏற்படும். அப்போது பங்குசந்தை, தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், அமெரிக்க டாலர்கள், கச்சா எண்ணெய் போன்றவற்றுக்கு இடையேதான் பணம் புழங்கும், அதன் நகர்வைப் பொறுத்து ஒரு பொருளின் - அது தங்கமாகவோ, பங்குகளாகவோ, ரியல் எஸ்டேட்டாகவோ, கச்சா எண்ணெய்யாகவோ இருக்கும்.

சர்வதேச சந்தையின் பணம் எந்த சொத்துப் பிரிவை விரட்டுகிறேதா, அவற்றில் விலையேற்றமும், எதை தவிர்கிறதோ, அதில் விலை சரிவும் ஏற்படுவது சந்தையின் இயல்பு. எனவே, தற்போது கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. ஆனால், இது இப்படியே தொடர வாய்ப்புகள் குறைவு. அடுத்து வரும் நாட்களில், மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கலாம். மேலும் ஓபெக் நாடுகள் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் தங்களது எண்ணெயை உற்பத்தியை அண்மையில் குறைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் ஒரு தளர்ந்த சூழ்நிலை என்பதால், ஓரளவுக்கு மேல் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment