/indian-express-tamil/media/media_files/2025/10/30/district-collector-cuddalore-news-2025-10-30-19-02-34.jpg)
கடலூர் அரசு மருத்துவமனையில் சிறுதானிய உணவகம்: மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் சிறுதானிய உணவு உணவகம் (Millet Food Canteen) அமைப்பதற்காக, தகுதியுடைய மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் (SHG) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
2025-26ஆம் ஆண்டு செயல்திட்டத்தின்படி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைத்திட அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்த அரசு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதியுடையவர்கள்: மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHG), உற்பத்தியாளர் குழுக்களின் கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்.
தகுதிகள்: தேர்வு செய்யப்படும் குழு அல்லது கூட்டமைப்பு 5 முதல் 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். உணவு தயாரித்து (விற்பனை) செய்வதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உணவகம் நடத்த 'A' அல்லது 'B' தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் அமைப்புகள், LOKOS Portal / NULM Portal போன்ற அரசின் இணையதளங்களில் உள்ள விவரங்களை அவசியம் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: தகுதியுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள், தங்கள் விண்ணப்பங்களை 10.11.2025 தேதி அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், பூமாலை வணிக வளாகத்தின் மாடியில் (BSNL அலுவலகம் எதிரில்), கடலூர் அலுவலகம். விண்ணப்பங்களை நேரில் சென்று அல்லது பதிவஞ்சல் (Registered Post) மூலமாகவும் அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us