Kotak Mahindra Bank, recently issued an important announcement to its customers via email that it could not use its debit cards and spendz card services at certain times: இந்தியாவில் இயங்கி வரும் தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக "கோட்டக் மகிந்திரா" வங்கி உள்ளது. நாட்டில் 1,600 கிளைகள் கொண்டுள்ள இந்த வங்கி சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட நேரத்தில் வங்கியின் டெபிட் கார்டுகள் மற்றும் spendz கார்டு சேவைகளை பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தி கோட்டக் மகிந்திரா வாடிக்கையாளரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏன் இந்த திடீர் அறிவிப்பு மற்றும் அது குறித்து விரிவான தகவல்களை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
வங்கிக்கு கணக்குளை மெயிண்டனன்ஸ் செய்ய வங்கிகள் அவ்வப்போது, பல்வேறு பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தி வைப்பதுண்டு. அந்தவகையில், கோட்டக் மகிந்திரா வங்கி திட்டமிடப்பட்ட மெயிண்டனன்ஸ் காரணமாக டெபிட் கார்டுகளை மற்றும் கார்டுகள் சார்ந்த சேவைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. "ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் இருக்காது. ATMகளில் பணம் எடுக்க முடியாது. அதுமட்டுமின்றி கார்டு இல்லாமல் பணம் எடுக்கவும் முடியாது." என்று கோட்டக் மகிந்திரா வங்கி தனது வாடிக்கையாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தது.
மேலும், "அன்புள்ள வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டு மற்றும் spendz கார்டு சேவைகள் ஆகிய இரண்டுமே சில மணி நேரத்துக்கு பயன்படுத்த முடியாது. இந்த சேவை நள்ளிரவு 12:00 மணியில் இருந்து விடியற்காலை 2:30 மணி வரை மற்றும் 3:30 மணியிலிருந்து 6 மணி வரை இருக்காது. ATM, PIN உருவாக்கம், PIN அங்கீகாரம், கார்டு இல்லாமல் பணம் எடுப்பது, QR மூலம் பரிவர்த்தனை, கார்டு ப்ளாக் அல்லது அன்பப்ளாக் செய்வது, கார்டு பரிவர்த்தனை லிமிட்களை மாற்றுவது ஆகியவை அடங்கும்."என்றும் கோட்டக் மகிந்திரா வங்கி தெரிவித்து இருந்தது.
டெபிட் கார்டு மற்றும் கார்டு சேவைகள் பயன்படுத்த தடை என்று குறிப்பிட்டுள்ள கோட்டக் மகிந்திரா வங்கி, இந்தத்தடை ஒரு நாளுக்கு மட்டும் தானா அல்லது மெயிண்டனன்ஸ் காரணமாக இது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது பற்றிய வேறு எந்த விவரத்தையும் தற்போது வரை வெளியிடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.