scorecardresearch

பிஎன்பி வங்கி மோசடியால் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை : வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணன் பேட்டி

இந்த மோசடியால் வாடிக்கையாளர்களோ, வங்கி பணியாளர்களோ அச்சப்பட தேவையில்லை. வங்கி வாடிக்கையாளர்களின் பணம் இன்சுரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்

PNB scam

பிஎன்பி வங்கியில் நடந்த 11500 கோடி ரூபாய் மோசடியால் வாடிக்கையாளர்களோ, வங்கி ஊழியர்களோ பயப்பட தேவையில்லை.

பஞ்சாப் நேஷன் வங்கியில் நடந்த மோசடி குறித்து ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி கோபாலகிருஷ்ணனுடன், ஐஇதமிழ் ஆசிரியர் ச.கோசல்ராம் ஃபேஸ்புக்கில் நேரலையில் விவாதித்தார்.

அப்போது, பிஎன்பி வங்கியில் நடந்த மோசடி வரலாறு காணாத மோசடி. பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஆண்டு லாபத்தைவிட 4 மடங்கு அதிகம். இந்த இழப்பை வசூலிக்க முடியும் என்றாலும் கால தாமதமாகும். அது வரையில் வங்கியை நடத்த மத்திய அரசுதான் பணம் தர வேண்டியது வரும். 11,500 கோடி ரூபாய் என்பதால் பட்ஜெட்டில் ஒதுக்கித்தான் கொடுக்க முடியும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால், ஏதோ ஒரு வகையில் வரியை உயர்த்தி மக்கள் தலையில்தான் ஏற்றுவார்கள்.

இந்த மோசடியால் வாடிக்கையாளர்களோ, வங்கி பணியாளர்களோ அச்சப்பட தேவையில்லை. வங்கி வாடிக்கையாளர்களின் பணம் இன்சுரன்ஸ் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். பெரிய வங்கி என்பதால் இன்னொரு வங்கியுடன் இணைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதில் பயப்பட தேவையில்லை’’ என்றார் கோபாலகிருஷ்ணன். அதன் விடியோ இணைப்பு.

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Customers do not need to be afraid of pnb bank fraud bank official gopalakrishnan interviewed

Best of Express