வங்கி லாக்கரில் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு தற்போது, புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வழிகாட்டுதல்கள், ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதாவது வங்கி லாக்கர் பயன்படுத்தும் ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளர்களும் ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் புதுப்பித்து கொள்ள வேண்டும்.
இதனை புதுப்பிக்க தவறினால், அந்த லாக்கரை உடைக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆம், . 3 ஆண்டுகள் லாக்கர் வாடகை செலுத்த தவறினால் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுக்கலாம்.
மேலும், வங்கிகளில் புதிய லாக்கர் குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும். அதில் நீங்கள் வங்கி லாக்கரை பயன்படுத்த நினைத்தால் லாக்கர் வசதிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கிக்கு தொடர்பு இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்கலாம்.
எனவே வங்கி லாக்கர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 1ஆம் தேதிக்குள் லாக்கர் புதுப்பித்தல் விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டுவிடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/