ஆகஸ்ட் மாதம் நாளைய தினம் தொடங்கவுள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.
சமையல் எரிவாயு
ஓவ்வொரு மாத தொடக்கத்திலும் எல்.பி.ஜி., சமையல் எரிவாயு விலை மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. இந்த விலைகள் சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் வரலாம்.
வருமான வரித் தாக்கல்
வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31 ஆகும். இந்தத் தேதியை அரசு நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்பன போன்ற செய்திகள் கடந்த வாரமே வெளியாகின.
அதை மெய்ப்பிக்கும் விதமாக வருமான வரி தாக்கல் செய்யும் தேதியை நீட்டிக்கப்போவதில்லை என அரசு அறிவித்துள்ளது. ஆக வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
ஹெச்.டி.எஃப்.சி அறிவிப்பு
தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி கடன்களுக்கான பெஞ்ச் மார்க்கை அதிகரித்துள்ளது. ஆகையால், புதிதாக கடன் வாங்குவோர் அல்லது ஏற்கனவே கடன் வாங்கியோருக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்படலாம்.
அஞ்சல திட்டங்களுக்கான வட்டி வீதம்
இந்திய ரிசர்வ் வங்கி வரும் வாரம் ரெப்போ வட்டி வீதத்தை அதிகரிக்கும் என தெரியவருகிறது. இதன் காரணமாக அஞ்சல சேமிப்புகளுக்கான முதலீடும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக அஞ்சல சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி வீதம் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா ரூ.5 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பாசிடிவ் பே என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தத் திட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. முன்னதாக அமெரிக்க மத்திய வங்கி முதலீடுகளுக்கான வட்டியை உயர்த்தியது.
இதனால், மற்ற வங்கிகளும் வட்டியை உயர்த்தும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டன. கடந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.50 காசுகள் உயர்வை கண்டது என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“