Income Tax Return Filing Last Date: பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
SBI Loans: இந்த நேரம் அக்கம் பக்கத்தினர் உதவ மாட்டாங்க… உங்க வங்கி கை கொடுக்கும்!
அப்போது அவர் கூறுகையில், 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31 தேதி இறுதி நாளாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருமான வரித்தாக்கல் கெடு தேதி ஜூலை 31-ம் தேதியில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50,000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதுபோல, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. புதிதாக பதிவு செய்யும் திட்டங்களுக்கும் பதிவுக்கால நீட்டிப்பு பொருந்தும். வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி. தேசிய நிதி மேம்பாடு கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.
கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது – புதிதாக வீடு வாங்குவோருக்கு அடித்தது ஜாக்பாட்
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் மூன்று மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும். பிஎஃப் தொகையை அரசே செலுத்துவதால் நிறுவனம், ஊழியர்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும். ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தியது.
’சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”