ரூ.1 லட்சம் முதலீடு.. 3 ஆண்டுகளில் ரூ.27,760 வட்டி.. மூத்த குடிமக்களே நோட் பண்ணுங்க! | Indian Express Tamil

ரூ.1 லட்சம் முதலீடு.. 3 ஆண்டுகளில் ரூ.27,760 வட்டி.. மூத்த குடிமக்களே நோட் பண்ணுங்க!

மூத்த குடிமக்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகளும் உயர்த்தியுள்ளன.

ரூ.1 லட்சம் முதலீடு.. 3 ஆண்டுகளில் ரூ.27,760 வட்டி.. மூத்த குடிமக்களே நோட் பண்ணுங்க!
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்தின் மீதான விகிதங்கள் முறையே 8% மற்றும் 7.1% ஆக 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

DCB வங்கி மூத்த குடிமக்களுக்கு 36 மாத FDகளில் 8.25% வரை வட்டி வழங்குகிறது. வங்கி 700 நாள்களுக்கு மேல் முதல் 36 மாதங்களுக்கும் குறைவான வைப்புகளுக்கு 8.25% வட்டி வழங்குகிறது.
அதாவது, மூத்த குடிமக்கள் டிசிபி வங்கி எஃப்டியில் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் முதலீட்டில் வட்டியாக ரூ.27,760 சம்பாதிக்கலாம்.

இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அதிக வருமானத்தை வழங்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCB வங்கி FD மூலம், மூத்த குடிமக்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு போன்ற வட்டி செலுத்துதல் போன்ற விருப்பங்களை தேர்ந்தெடுக்கும் வசதியையும் வழங்குகிறது.

மேலும் மூத்த குடிமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வட்டியை மாற்றுவதற்கான விருப்பத்தையும் பெறுகிறார்கள்.
மே 2022 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை நான்கு முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Dcb bank fixed deposit interest rate for senior citizens