சேமிப்புக்கு 8%, எஃப்.டி-க்கு 8.55% வட்டி: இந்த வங்கியை கொஞ்சம் பாருங்க!
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.55 சதவீதம் வட்டியும், சேமிப்பு கணக்குக்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கும் டி.சி.பி வங்கி குறித்து இங்கு பார்க்கலாம். இந்த வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை அண்மையில் திருத்தியது.
டி.சி.பி (DCB) வங்கி தனது சேமிப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்பு வட்டி விகிதங்களை (ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைக்கு) திருத்தியுள்ளது. டி.சி.பி வங்கியின் இணையதளத்தின்படி, புதிய வட்டி விகிதங்கள் மே 22, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
Advertisment
புதிய வட்டி விகிதங்களின்படி, 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 8% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.55% வங்கி அதிகபட்சமாக வங்கி வட்டி வழங்குகிறது.
டி.சி.பி. வங்கி வட்டி விகிதங்கள்
ஃபிக்ஸட் டெபாசிட் காலம்
சாதாரண குடிமக்கள் (%)
மூத்தக் குடிமக்கள் (%)
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை
3.75
4.25
46-90 நாள்கள்
4.00
4.50
91-6 மாதங்கள்
4.75
5.25
6-10 மாதங்கள்
6.20
6.70
10-12 மாதங்கள்
7.25
7.75
12 மாதங்கள்
7.10
7.60
12 மாதம் 10 நாள்கள்
7.75
8.25
12 மாதம்-17 மாதம்
7.15
7.65
17-18 மாதம் 5 நாள்
7.10
7.60
18 மாதம் 6 நாள் 19 மாதத்துக்குள்
7.40
7.90
19-20 மாதம்
8.05
8.55
20 மாதம் 1 நாள், 700 நாள்கள்
7.40
7.90
700 நாள்கள் 26 மாதம்
7.50
8.00
26-37 மாதங்கள்
7.55
8.05
37-38 மாதங்கள்
7.75
8.25
38-61 மாதங்கள்
7.40
7.90
61 மாதம்
7.65
8.15
61-120 மாதங்கள்
7.25
7.75
சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்க7.7ள்
பணம்
வட்டி விகிதம்
ரூ.1 லட்சத்துக்குள்
1.75%
ரூ.1-5 லட்சம்
3.00%
ரூ.5-10 லட்சம்
5.25%
ரூ.10 லட்சம் -ரூ.1 கோடி
7.75%
ரூ.1-ரூ.2 கோடி
8.00%
ரூ.2-5 கோடி
5.50%
ரூ.5-ரூ.10 கோடி
7.00%
ரூ.10-ரூ.50 கோடி
7.75%
ரூ.50-ரூ.200 கோடி
7.75%
ரூ.200 கோடிக்கும் மேல்
5.50%
டி.சி.பி (DCB) வங்கியின் இணையதளத்தின்படி, “கணக்கில் உள்ள தெளிவான இருப்புத் தொகையின் அடிப்படையில் தினசரி வட்டி கணக்கிடப்படும் மற்றும் காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“