7 வது ஊதியக்குழு, அகவிலைப்படி உயர்வு பற்றிய சமீபத்திய செய்தி: கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வு மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜே.சி.எம் கவுன்சில், பணியாளர்கள் சார்பில், ஜூன் 2021 இல் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான டிஏ உயர்வை அறிவிக்கக்கூடும் என்று கூறியுள்ளது. வரவிருக்கும் டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் டிஏ உயர்வு அறிவிப்பு நிலுவையில் உள்ளது. கோவிட் -19 இரண்டாவது அலையின் காரணமாக எதிர்பார்க்கப்படும் டிஏ உயர்வு சுமார் ஒரு மாதம் தாமதமாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஏப்ரல் இறுதிக்குள் அல்லது மே முதல் பதினைந்து நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட டிஏ உயர்வு இப்போது ஜூன் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அகவிலைப்படி உயர்வு 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் சம்பளத்தில் ஏற்படுத்தும் தாக்கம்
எதிர்பார்க்கப்படும் டிஏ உயர்வு அறிவிப்பு (4 சதவீத அடிப்படை சம்பளத்திற்கு) மத்திய அரசு ஊழியர்களின் 7 வது ஊதியக்குழு (7 வது சிபிசி) ஊதிய வரைமுறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனென்றால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் சலுகைகளை ஏற்கனவே 2021 ஜூன் வரை முடக்கியுள்ளது.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் சலுகைகள் ஜூலை 2021 முதல் வழங்கப்படும் என்று மத்திய அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தது. இதன் பொருள், ஜனவரி 1, 2021 முதல் வரவிருக்கும் டிஏ உயர்வு இப்போது அறிவிக்கப்பட்டாலும், அது 2021 ஜூலை 1 முதல் தேதியிலிருந்தே வழங்கப்படும்.
டி.ஏ.வின் எதிர்கால தவணையை வெளியிடுவதற்கான முடிவு எப்போது, எடுக்கப்படும் என்று மத்திய அரசு பாராளுமன்றத்தின் மேல் சபைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தது. டிஏ விகிதங்கள் 01-01-2020, 01-07-2020 மற்றும் 01-01-2021 ஆகிய முந்தைய மூன்று விகிதங்கள் தற்போது வழங்கப்பட உள்ளது. மேலும் 01-07-2021 முதல் அமல்படுத்தப்படும் ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்களில் அவை அடங்கிவிடும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 2021 மார்ச் மாதம் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil